பிளிப்கார்ட் 2026 கோட் சேல்.. ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் டிவி வரை.. அசத்தல் தள்ளுபடி!
Flipkart 2026 Goat Sale Offers Exciting Discounts | பிளிப்கார்ட் நிறுவனம் 2026 ஆம் ஆண்டுக்கான தனது கோட் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த சேல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது தான் பிளிப்கார்ட் (Flipkart). இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். இதன் காரணமாக பிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சேல்கள் மூலம் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான கோட் சேலை (Flipkart 2026 Goat Sale) அறிவித்துள்ளது. இன்று (ஜூலை 04, 2026) முதல் தொடங்கும் இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் கோட் சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி மற்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிளிப்கார்ட் கோட் சேல் – ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி
பிளிப்கார்டின் இந்த கோட் சேலில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
- ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் (Apple iPhone 17 Smartphone) – ரூ.82,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.70,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் கேலக்ஸி எஸ்25 5ஜி ஸ்மார்ட்போன் (Samsung Galaxy S25 5G Smartphone) – ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.56,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Budget Smartphones : ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!




லேப்டாப், டிவிக்கான அசத்தல் தள்ளுபடி
- எச்பி 15 கோர் 5 லேப்டாப் (HP15 Core 5 Laptop) – ரூ.74,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேப்டாப் தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.63,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி டிவி (Samsung 55 Inc Mini LED TV) – ரூ.89,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி, தற்போது பிளிப்கார்ட் சேலில் ரூ.37,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப் பிசினஸ் ஏஐ ஏஜெண்ட் அம்சத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
வங்கி சலுகைகள் என்ன என்ன?
இந்த பிளிப்கார்ட் கோட் சேலில் ஐசிஐசிஐ வங்கி, எச்எஸ்பிசி வங்கி, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளின் கார்டுகளுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. இந்த கார்டு பயனர்களுக்கு வருகை போனசாக ரூ.1,500 வழங்கப்படும். விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் வாங்க நினைக்கும் நபர்களுக்கு இந்த கோட் சேல் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.