Gold Price : சரிவை சந்தித்த தங்கம்.. ஒரே நாளில் ரூ.1,120 குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price Reduced In Chennai | ஜூன் மாதத்தில் தங்கம் கடும் சரிவை சந்தித்த நிலையில், ஜூலையில் சற்று உயர்வை சந்திக்க தொடங்கியது. இந்த நிலையில், இன்று (ஜூலை 06, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது.
சென்னை, ஜூலை 06 : தங்கம் விலை (Gold Price) ஜூன் மாதம் தொடர் சரிவுக்கு பிறகு ஜூலை மாதத்தில் சற்று உயர்வை காண தொடங்கியது. அதாவது கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வந்தது. இந்த நிலையில், இன்று (ஜூலை 06, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜூலையில் உயர்வை சந்திக்க தொடங்கிய தங்கம்
ஈரான் போர் காரணமாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் ஜூன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்தது. அதாவது ஜனவரி மாதம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கம், ஜூன் மாதத்தில் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான், ஜூலை மாதம் மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியது.
இதையும் படிங்க : EPFO இணையதளத்தில் இனி இந்த சேவைகள் கிடைக்காது.. வேறு என்ன செய்வது?
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.13,560-க்கும், சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.