Jana Nayagan: தங்கமே தளபதி Blast-uh.. Blast-uh.. ஜன நாயகன் பட தளபதி கச்சேரி வீடியோ பாடல் வெளியானது!
Thalapathy Kacheri Video Song: ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் கொண்டாடவும் நாயகனாக இருந்துவந்தவர் தளபதி விஜய். சினிமாவில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஜன நாயகன். இப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி வீடியோ பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இயக்குநர் எச்.வினோத்தின் (H Vinoth) இயக்கத்தில், முன்னாள் நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் (CM Vijay) நடித்த கடைசி திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படம் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலே வெளியாகவேண்டியிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணங்களால் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின் ஜூலை 23ம் தேதியில் வெளியானது. இந்த படத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி மற்றும் ஆக்ஷன் காட்சியில் நடித்தது அசத்தியிருந்தார். இதில் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) லீட் நாயகியாக நடிக்க, மிகவும் முக்கியமான வேடத்தில் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருந்தார். ஜன நாயகன் படமானது வெளியீட்டிற்கு முன்பு இணையத்தில் லீக் ஆகியிருந்தாலும், புதிய திரைப்படத்தை போலவே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடியிருந்தனர்.
இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர்(Anirudh Ravichander) இசையமைப்பாளராக இசையமைத்த நிலையில், இவரின் இசையில் ஜன நாயகன் பட முதல் பாடல் தளபதி கச்சேரி (Thalapathy Kacheri). தற்போது ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட்டடித்துவரும் நிலையில், “தளபதி கச்சேரி” பாடலின் முழு வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: பேமிலி பேக்ரவுண்ட் கதையில்… சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ட்ரெய்லர் வெளியானது!
ஜன நாயகன் திரைப்படத்தின் தளபதி கச்சேரி வீடியோ பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The celebration just got louder! 🔥🥁
Turn up the volume and join the #ThalapathyKacheri! 🎶
Full Video OUT NOW.Telugu- https://t.co/by1T7CSewr
Tamil-https://t.co/KzCI5Ozs3X#JanaNayagan pic.twitter.com/1KKgvddXMa— T-Series South (@tseriessouth) August 7, 2026
ஜன நாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ்:
ஜன நாயகன் திரைப்படமானது பல்வேறு பிரச்சனைகளை கடந்து கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் ஒட்டுமொத்த திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகியிருந்த முதல் நாளிலே சுமார் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தது. இப்படம் இணையத்தில் லீக் ஆகி பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இப்படம் திரையரங்குகளில் வெளியாகி படத்தில் போடப்பட்ட முதலீட்டை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ 300 கோடிகள் கிட்ட இப்படம் வசூல் செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜயை அப்படிதான் அழைத்தேன்.. சந்தித்த தருணம் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய விஷால்!
ஆரம்பத்தில் அமேசான் பிரைம் நிறுவனம் ஜன நாயகன் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றது. பின் இப்படம் இணையத்தில் லீக் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அந்த உரிமை மறுக்கப்பட்டது. பின் இதை ஜீ5 ஓடிடி நிறுவனம் வாங்கியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் ஸ்தீம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.