ஓடிடியில் வெளியான பிறகும் வசூலில் கலக்கும் நிவின் பாலியின் சர்வம் மாயா படம்
Sarvam Maya Movie Box Office Collection: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி, இவரது நடிப்பில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான சர்வம் மாயா படம் தற்போது வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவைப் பொருத்தவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் அடங்கியதுதான் ஆகும். இதில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பெரிய அளவில் பட்ஜெட்டில் படங்கள் வெளியாகும். இந்த மொழிகளில் நடிக்கும் நடிகர்களின் சம்பளமும் அதிகமாக இருக்கும். மேலும் கன்னடம் மற்றும் மலையாள சினிமாவைப் பொருத்தவரை படங்களின் பட்ஜெட் மற்றும் நடிகர்களின் சம்பளமும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில் சமீப காலமாகவே மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த மொழிகளில் படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தொடர்ந்து 100 கோடிகளை கடந்து வருகின்றது.
மேலும் கடந்த 2025-ம் ஆண்டு துல்கர் சல்மானின் தயாரிப்பில் மலையாள சினிமாவில் வெளியான லோகோ படம் 30 கோடி பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 300 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து சாதனைப் படைத்தது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான பலப் படங்கள் 100 கோடிகளுக்கு அதிகமாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.




ஓடிடியில் வெளியான பிறகும் வசூலில் கலக்கும் சர்வம் மாயா படம்:
இந்த நிலையில் மலையாள சினிமாவில் கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சர்வம் மாயா. நடிகர் நிவின்பாலி நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் ஹாரர் காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாணியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதன் காரணமாக படம் தற்போது வரை 150 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
₹150 crores worldwide. A truly unforgettable theatrical run. ❤️#SarvamMaya is now streaming on @JioHotstarMal and still running successfully in theatres near you!✨
.
.#SarvamMayaMovie #Akhilsathyan #Fireflyfilms #PrietyMukundhan #AjuVarghese #RiyaShibu #Justinprabhakaran pic.twitter.com/RepTi5PyAZ— Nivin Pauly (@NivinOfficial) February 2, 2026
Also Read… சரத்குமாரின் ஆழி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அப்டேட்!