Dhanush: அடுத்த முறை நீங்கள் வரும்போது.. மம்முட்டியிடம் குட்டி வேண்டுகோள் வைத்த தனுஷ் – சிரித்த அரங்கம்!
Dhanush Request To Mammootty: தமிழில் மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ஓ.எம். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மம்முட்டியிடம் தனுஷ் வைத்துள்ள வேண்டுகோள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்தாலும், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நாயகனாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara Movie). இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் வெளியான நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு இந்த 2026ம் ஆண்டில் தனுஷின் நடிப்பில் 2வது வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஓ.எம் (O.M Movie). இதை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Pariasamy) இயக்க, தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணி இப்படத்தில் முதல் முறையாக இணைந்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, நடிகர் மம்முட்டி சிறப்பான வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நடைபெற்றிருந்தது. அதில் மேடையில் பேசிய தனுஷ், மம்முட்டியிடம் நகைச்சுவையாக சிறிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.




இதையும் படிங்க: அல்லகலோவா அஸ்ஸி பாவா… மேடையில் ஒன்றாக இணைந்து நடனமாடிய டான்ஸிங் குயின்ஸ் சாய் பல்லவி – ஸ்ரீலீலா!
மம்முட்டியிடம் வேண்டுகோள் வைத்த நடிகர் தனுஷ்:
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிக்கொண்டிருந்த தனுஷ், நடிகர் மம்முட்டியை நோக்கி, “மம்முட்டி சார், எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள். அடுத்த முறை நீங்கள் வரும்போது, தயவுசெய்து உங்கள் தாடியில் இன்னும் சில நரைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், நான் உங்கள் அண்ணன் போல் இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால், நான் இளமையாகத் தெரிவேன். அதனால் அடுத்தமுறை வரும்போது கொஞ்சம் நரை முடிகளை வளர்த்துக்கொள்ளுங்கள்” என சிரித்தபடியே தனுஷ் பேசியுள்ளார்.
மம்முட்டியிடம் தனுஷ் வேண்டுகோள் வைத்து பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
#Dhaunsh Request to #Mammootty 😅
– Mammootty sir, I have one request for you! Next time you come, please add a few more greys to your beard, because people are saying I look like your elder brother. That way, I’ll look younger.
#OM https://t.co/84Sf1Ds76R— Movie Tamil (@_MovieTamil) November 17, 2026
தனுஷ் மற்றும் மம்முட்டி தமிழ் சினிமாவில் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம்தான் ஓ.எம். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, கடத்தல் கூட்டத்தின் தலைவராக மம்முட்டி நடித்துள்ளார். தனுஷ் ஒரு உளவாளி என்ற நிலையில், மம்முட்டியுடன் இணைந்து அவரின் திட்டங்கள் மற்றும் கடத்தல் தொடர்பான விஷயங்களை அறிந்துகொள்ளும் வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் 48-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் அப்டேட்
இவர்களுடன் இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள நிலையில், இது ஒரு மல்டிஸ்டார் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படம் 2026 நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.