டிடிஃஎப் பார்த்து பொறாமையா? அடுக்கடுக்கான கேள்விகளை ஜேசனிடம் மாறிமாறி கேட்ட போட்டியாளர்கள் – திமிருக்காட்டிய ஜேசன்!
Bigg Boss 10 Tamil Promo: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. கடவுள் பாதி மிருகம் பாதி என்ற டாஸ்கில், ஜேசனிடம் மாறிமாறி சக போட்டியாளர்கள் கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு ஜேசன் திமிருக்காட்டும் விதத்தில் நடந்துகொண்டது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay Tv) சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் 6ம் தேதி முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமானது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது வெறும் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பமாகி கிட்டத்தட்ட 10 வாரங்களை கடந்த நிலையில், தற்போது 11வது வாரத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடந்துவருகிறது. அந்த விதத்தில் இன்று (18/11/2026) “கடவுள் பாதி மிருகம் பாதி” என்ற டாஸ்க் நடந்த நிலையில், இதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை கோபப்படுத்தும் விதத்தில் எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம்.
அந்த டாஸ்க் நடக்கும் நிலையில், அதில் ஜேசனிடம் (Jason) போட்டியாளர்கள் சரமாரியாக மாறிமாறி கேள்விகளை கேட்டுள்ளனர். இந்நிலையில் வினோத் பாபு கேள்வி கேட்கும்போது ஜேசன் செய்த விஷயம் போட்டியாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: புலி பட இயக்குநரின் நவோரியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
சக போட்டியாளர்களிடம் திமிருக்காட்டிய ஜேசன்:
இந்த ப்ரோமோவில், அரியணையில் இருக்கும் ஜேசனிடம், சக போட்டியாளர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளார். அதில் முதலில் ஜேசனிடம் கேட்ட சாதிகா “என்ன டிடிஃஎப் வாசனை பார்த்து பொறாமையாக இருக்கிறதா?” என கேள்வி கேட்டார். அதன் பிறகு, லக்ஷ்மி பிரியா, ” ஒரு குரூப் குல்லையே விளையாடுறீங்க.. தனியா விளையாட பயமா?” என கேள்வி கேட்டார். மேலும் டிடிஃஎப் வாசன், “திமிரிலே ஊறி இருக்கியேடா நீ” என கேட்டார். அதன் பிறகு அடாவடி அன்சர், “இந்த ஷோவை விட்டு வெளியேறுறேன்னு சொன்ன இன்னும் உள்ளையே இருக்கியே” என கேட்டார்.
இதையும் படிங்க: ஹபீபி படத்தை பாராட்டி பேசிய நடிகர் மம்முட்டி…. இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
அதற்கு பிறகு வினோத் பாபு, “உனக்கு 3 லெட்டர் போடும்போது குளிர்ந்து.. எட்டு லட்டு கொடுத்தபோது உனக்கு ஏன் வலிக்கிது. விளையாட்டு சம்பாதிக்கனும்டா அன்பை” என அவர் கூறினார். உடனே ஜேசன், தனது காலைல இருக்கும் செருப்பை காட்டினார். உடனே, சாதிகா, தன்யா மற்றும் லக்ஷ்மி பிரியா, மூவரும் என்ன நீங்க பண்ணீங்க.. இது நல்ல இல்ல என அவர்கள் கூறியிருந்தனர். மேலும் இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 73வது 4வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day73 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/Olpc0b2qT2
— Vijay Television (@vijaytelevision) November 18, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது 11வது வாரத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே வாரமானது நடந்துவருகிறது. அந்த விதத்தில் போட்டியாளர்கள் டிக்கெட் டூ ஃபினாலே-காக பல டாஸ்குகளை சிறப்பாக செய்துவருகிறார்கள் என்பது குறித்து இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.