AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆசிய விளையாட்டு – சீனாவை வீழ்த்தியி இந்திய ஹாக்கி அணி – 44 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று சாதனை

Asian Games 2026: இந்திய அணி வரலாறு படைத்தது ஆசிய விளையாட்டு மகளிர் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை 1982ஆம் ஆண்டுக்கு பிறகு 44 ஆண்டுகளாக ஹாக்கியில் தங்கம் வெல்லாத இந்திய அணியின் நீண்ட ஏக்கம் முடிவுக்கு வந்தது

ஆசிய விளையாட்டு  – சீனாவை வீழ்த்தியி இந்திய ஹாக்கி அணி – 44 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று சாதனை
இந்திய ஹாக்கி அணி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Oct 2026 18:41 PM IST

இந்திய அணி வரலாறு படைத்தது ஆசிய விளையாட்டு மகளிர் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 1982ஆம் ஆண்டுக்கு பிறகு 44 ஆண்டுகளாக ஹாக்கியில் தங்கம் வெல்லாத இந்திய அணியின் நீண்ட ஏக்கம் முடிவுக்கு வந்தத.   மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய அணி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

44 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்று சாதனை

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, சீனாவை வீழ்த்தி 44 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. விறுவிறுப்பாகவும் கடுமையாகவும் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியா சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 44 ஆண்டுகளாக நீடித்து வந்த போராட்டத்துக்கு இந்திய மகளிர் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வெற்றி ஆசிய சாம்பியன் பட்டம் வென்றதோடு மட்டுமல்லாமல், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ தகுதியையும் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெற்றுள்ளது.

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டுப்போட்டி.. குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹைன் தங்கம்

இந்தியாவின் வெற்றக்கு வீராங்கனை லால்ரெம்சியாமி முக்கிய பங்கு வகித்தார். இக்கட்டான நேரத்தில் அவரது அசாத்தியமான கோல் இந்தியாவின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக அவர் போட்டியின் முதல் கால் பகுதியில் அவர் சீன வீரர்களின் பாதுகாப்பு அரணை நிலைகுலையச் செய்தார். மேலும் 10வது நிமிடத்தில், சக வீராங்கனை சாக்ஷி, லால்ரெம்சியாமிக்கு ஒரு சாமர்த்தியமான பாஸைக் கொடுத்தார்.

இதனையடுத்து லால்ரெம்சியாமி உடனடியாகத் திசையை மாற்றி, திரும்பி, ஒரு பரபரப்பான டோமஹாக் ஷாட்டை அடித்தார். அவரது ஷாட் மிகவும் துல்லியமாக இருந்ததது. இதனால் சீன கோல்கீப்பர் பாய்ந்து வந்தும் அவரால் கோலை தடுக்க முடியவில்லை. மேலும் பந்து நேராக கோல் கம்பத்தின் மூலைக்குள் சென்றது. இந்த ஒரு கோல் இந்தியாவிற்கு பெரும் பலமாக அமைந்தது. அதை இந்தியப் பாதுகாப்பு அரண் இறுதி நிமிடம் வரை தக்க வைத்துக் கொண்டது.

ஒலிம்பிற்கு நேரடியாக தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி

இந்திய ஹாக்கி மகளிரணியின் இந்த வெற்றியானது பல ஆண்டு கால போராட்டத்துக்கும் மனவேதனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. கடைசியாக ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில், இந்திய மகளிர் அணி இதற்கு முன்பு கடந்த 1982 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றிருந்தது. அதன்பிறகு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகியும், இந்திய அணி இதுவரை தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் தவித்தது.

இதையும் படிக்க : 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா எப்போது, ​​எந்த அணியை எதிர்கொள்ளும்? முழு அட்டவணை

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் ஒலிம்பிக் பயணத்திற்கு ஒரு பெரும் நம்பிக்கை கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் விதிகளின்படி, மகளிர் ஹாக்கிப் போட்டியில் தங்கம் வெல்லும் அணி அடுத்த ஒலிம்பிக்கிற்கு நேரடியாகத் தகுதி பெறும். அதன் விளைவாக, இந்தியா 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us