AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: சதத்திற்கு பிறகு குழந்தை போல் கொண்டாட்டம் ஏன்? சிரித்த முகத்துடன் பேசிய ரோஹித் சர்மா!

Rohit Sharma Century Celebration: தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, குவஹாத்தியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அபாரமாக 101 ரன்கள் எடுத்தார். இது அவரது 35வது ஒருநாள் சதமாகும். இருப்பினும், அவரது பேட்டிங்கை விட, போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா கொண்டாடிய தனித்துவமான முறை அதிக கவனத்தை ஈர்த்தது.

IND vs WI: சதத்திற்கு பிறகு குழந்தை போல் கொண்டாட்டம் ஏன்? சிரித்த முகத்துடன் பேசிய ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Oct 2026 18:01 PM IST

முன்னாள் இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, குவஹாத்தியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அபாரமாக 101 ரன்கள் எடுத்தார். இது அவரது 35வது ஒருநாள் சதமாகும். இருப்பினும், அவரது பேட்டிங்கை விட, போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா கொண்டாடிய தனித்துவமான முறை அதிக கவனத்தை ஈர்த்தது. தனது சதத்தை நிறைவு செய்த பிறகு, ரோஹித் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடினார். ஒரு ரன் எடுக்கும்போது, ​​அவர் எதிர்முனையை நோக்கி குதித்தார். ரோஹித்தின் இந்த கொண்டாட்டத்தை முதல் முறையாகக் கண்ட ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது, ​​இந்தக் கொண்டாட்டத்திற்கான காரணத்தை ரோஹித் சர்மா (Rohit Sharma) விளக்கியுள்ளார்.

ALSO READ: 35வது சதத்துடன் குவிந்த சாதனை.. 12,000 ரன்களையும் கடந்த ரோஹித் சர்மா!

போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் அதுபற்றிக் கேட்டபோது, ​​ரோஹித் சர்மா சிரித்துக்கொண்டே, “அந்தக் கொண்டாட்டம் எனக்காக மட்டுமே. சில விஷயங்களை நாம் நமக்குள் வைத்துக்கொண்டு, வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டோம். அதனால், அந்தக் கொண்டாட்டம் எனக்காக மட்டுமே” என்றார்.

406 ரன்கள் இலக்கை விரட்டிய இந்தியா:


406 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்தியபோது, ​​ரோஹித்தும் இந்திய கேப்டன் ப்மன் கில்லும் இந்தியாவுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தனர். அவர்கள் 255 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆட்டத்தை முழுவதுமாக இந்தியாவின் பக்கம் திருப்பினர். ரோஹித் கூறியதாவது, “கில்லும் நானும் ஸ்கோர்போர்டைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆடுகளம் நன்றாக இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் தொடர்ந்து பேட்டிங் செய்யவே விரும்பினோம். நாங்கள் ஸ்கோர்போர்டைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. பந்தின் தரத்திற்கு ஏற்ப விளையாடி, பார்ட்னர்ஷிப்களை உருவாக்கவே முயன்றோம். இவ்வளவு பெரிய இலக்கைத் துரத்தும்போது, ​​பெரிய பார்ட்னர்ஷிப்கள் தேவை. கில் அற்புதமாக விளையாடினார். ஆட்டம் முழுவதும் தனது பேட்டிங்கில் சிறந்த கட்டுப்பாட்டுடன் இருந்தார்.”என்றார்.

ALSO READ: இது கிரிக்கெட் அல்ல, இது வெறும் பேட்டிங்.. 400 ரன்கள் துரத்தியும் மகிழ்ச்சியடையாத கம்பீர்!

வெப்பத்தில் பேட்டிங் செய்வது ஒரு பெரிய சவால் என்று கூறிய ரோஹித் ஷர்மா, முதல் இன்னிங்ஸில் நீண்ட நேரம் ஃபீல்டிங் செய்த பிறகு பேட்டிங் செய்வது எளிதாக இல்லை என்பது குறித்து பேசிய ரோஹித் சர்மா,  “இங்குள்ள சூழ்நிலைகள் கடினமாக இருப்பதால், உங்கள் விக்கெட்டுகளை இழக்கக் கூடாது என்பதை உங்களுக்கு நீங்களே தொடர்ந்து நினைவூட்டிக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் எனது பல வருட அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அவ்வளவு எளிதாக விக்கெட்டுகளை இழக்கக் கூடாது. முடிந்தவரை ஆட்டத்தில் நிலைத்திருக்க முயற்சிக்க வேண்டும். பிட்ச் நன்றாக இருந்தது என்றும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடமிருந்து பெரிய ரன்கள் தேவை என்றும் எங்களுக்குத் தெரியும், அதுவேதான் நடந்தது. எங்கள் இன்னிங்ஸின் தொடக்கத்தில் நாங்கள் ஒரு மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம், அதுவே எங்கள் வெற்றியை உறுதி செய்தது.” என்று கூறினார்.

Follow Us