IND vs WI: ஒருநாள் போட்டியில் 2வது இரட்டை சதம்.. சம்பவம் செய்த சுப்மன் கில்!
Shubman Gill Double Century: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 406 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தார். இந்தநிலையில், வெறும் 117 பந்துகளில் 200 ரன்களை கடந்து அசத்தினார். இது ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில்லின் 2வது இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் (IND vs WI) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 406 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தார். இந்தநிலையில், வெறும் 117 பந்துகளில் 200 ரன்களை கடந்து அசத்தினார். இது ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில்லின் 2வது இரட்டை சதம் என்பது குறிப்பிடத்தக்கது. குவஹாத்தியிலுள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 406 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில், பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சரமாரியாக விளாசினார்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைத் தகர்த்தெறிந்த கில், வெறும் 62 பந்துகளில் அதிரடியான சதத்தை நிறைவு செய்தார். இந்தச் சாதனையின் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது அதிவேக ஒருநாள் சதத்தை கில் பதிவு செய்தார்.




ALSO READ: கில் இரட்டை சதம்.. ரோஹித் சர்மா சதம்.. 406 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் துரத்திய இந்தியா
அதிவேக இரட்டை சதம்:
The man of the moment 🙌🫡#TeamIndia Captain Shubman Gill is the Player of the Match for his record shattering knock 🌟
RELIVE his knock ▶️ https://t.co/erDe5T7xvQ#INDvWI | @mflone_ | @ShubmanGill pic.twitter.com/0vQmEH5ak3
— BCCI (@BCCI) September 30, 2026
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அடித்த அதிவேக இரட்டைச் சதம் இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைத் தகர்த்தெறிந்த கில், வெறும் 62 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து கில் 119 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைச் சதங்களை அடித்த ரோஹித்துக்குப் பிறகு, கில் இரண்டாவது பேட்ஸ்மேன் ஆவார். முன்னதாக, கில் 2023-ல் நியூசிலாந்துக்கு எதிராக 208 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: ரன் மழை பொழிந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. இந்திய அணிக்கு எதிராக 405 ரன்கள் குவிப்பு!
ஒருநாள் போட்டியில் இலக்கை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் அதாவது சேஸிங்கில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். இதுவரை, இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்த இரட்டைச் சதங்கள் அனைத்தும் முதலில் பேட்டிங் செய்யும்போதே வந்துள்ளன. முன்னதாக திருவனந்தபுரத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் இது அவரது இரண்டாவது தொடர்ச்சியான சதமாகும். மேலும் தற்போது அவர் தனது 2வது இரட்டைச் சதத்தை நிறைவு செய்துள்ளார்.