AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ICC Ranking: தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி.. கில்லுடன் முதலிடத்திற்கு போட்டி!

Virat Kohli ODI Rankings: கோலி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தால், அது முதல் முறையாக இருக்காது. இதற்கு முன்பும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் பல நாட்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகள் என 3 வடிவங்களிலும் விராட் கோலி தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ICC Ranking: தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி.. கில்லுடன் முதலிடத்திற்கு போட்டி!
விராட் கோலி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Sep 2026 17:08 PM IST

கடந்த 2026 செப்டம்பர் 27ம் தேதி திருவனந்தபுரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (IND vs WI) எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli) ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது கோலி வெறும் 88 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை அடித்தார். இதன்போது அவரது ஸ்டிரைக் ரேட் 157.95 ஆக இருந்தது. இந்த இன்னிங்ஸ் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கோலிக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆவதற்கு அவர் இப்போது இன்னும் ஒரு படி மட்டுமே உள்ளது.

ALSO READ: முதல் போட்டியில் சதம்.. 2வது போட்டிக்கு முன் காயம்.. விலகும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்ரீவ்ஸ்!

2ம் இடத்தில் விராட் கோலி:

2026 செப்டம்பர் 30ம் தேதியான இன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஒருநாள் போட்டித் தரவரிசையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 796 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 816 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இன்னும் ஓரிரு நல்ல ஆட்டங்களை வெளிப்படுத்தினால், விராட் கோலி தரவரிசையில் சுப்மன் கில்லை எளிதாக முந்திவிடுவார்.

கோலி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தால், அது முதல் முறையாக இருக்காது. இதற்கு முன்பும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் பல நாட்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகள் என 3 வடிவங்களிலும் விராட் கோலி தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 5 இடங்களுக்குள் ரோஹித் சர்மா:

ஒருநாள் போட்டிகளின் பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். முதல் ஐந்து இடங்களுக்குள் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 794 மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்திலும், முன்னாள் இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா 753 மதிப்பீட்டுடன் நான்காவது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரான் 719 மதிப்பீட்டுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

ALSO READ: விராட் கோலியின் அதிருப்தி.. இதுதான் நடந்தது.. முகமது கைஃப் சொன்ன புது தகவல்

டாப் 10க்குள் எந்தெந்த வீரர்கள்?

முதல் ஐந்து இடங்களைத் தாண்டி முதல் பத்து இடங்கள் பட்டியலில் ஒரே ஒரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மட்டுமே இடம்பெற்றுள்ளார். பாபர் அசாம் 689 மதிப்பீட்டுடன் 6வது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, இலங்கையின் குசல் மெண்டிஸ் ஏழாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 8வது இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 9வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 10வது இடத்திலும் உள்ளனர்.

Follow Us