AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: 35வது சதத்துடன் குவிந்த சாதனை.. 12,000 ரன்களையும் கடந்த ரோஹித் சர்மா!

Rohit Sharma Century: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மா 35வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்தார். தனது திறமையையும் உடற்தகுதியையும் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரோஹித் சர்மா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை சதம் அடித்து நிறைவு செய்தார்.

IND vs WI: 35வது சதத்துடன் குவிந்த சாதனை.. 12,000 ரன்களையும் கடந்த ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 30 Sep 2026 21:28 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியா வெற்றிபெற 406 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கு இருந்த நிலையில், ரோஹித் சர்மாவும் இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில்லும் ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆரம்பம் முதலே ஆதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் மிகச் சிறப்பாக விளையாடி, இருவரும் சதத்தை பதிவு செய்தனர். அதன்படி, கேப்டன் கில் தனது 11வது ஒருநாள் சதத்தை அடித்தார். தொடர்ந்து, இந்திய அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மா (Rohit Sharma) 35வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்தார். தனது திறமையையும் உடற்தகுதியையும் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரோஹித் சர்மா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை சதம் அடித்து நிறைவு செய்தார். 6 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளை அடித்து, ரோஹித் சர்மா தனது சதத்தை 72 பந்துகளில் எட்டினார்.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் சதம்.. வரலாற்றில் முதல் முறையாக 400 ரன்கள்..!

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 12,000 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்கள்

  • 18426 – சச்சின் டெண்டுல்கர்
  • 15080 – விராட் கோலி (இந்தியா)
  • 14234 – குமார் சங்கக்கார (இலங்கை)
  • 13704 – ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
  • 13430- சனத் ஜெயசூர்யா (இலங்கை)
  • 12650- மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை)
  • 12000* ரோஹித் சர்மா (இந்தியா)

ரோஹித் சர்மாவின் சர்வதேச வாழ்க்கை


39 வயதான ரோஹித் சர்மா, 2007ம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். அன்று முதல், டி20, ஒருநாள் போட்டி உட்பட மிக நீண்ட இன்னிங்ஸ் சாதனை உட்பட ஏராளமான சாதனைகளை ரோஹித் சர்மா படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்ததே ஆகும். அவரது தலைமையின் கீழ் நடைபெற்ற கடைசி ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது. ரோஹித் சர்மா இந்திய அணிக்காக இதுவரை 290 ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் உட்பட 12,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.

ALSO READ: விரைவில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.. உள்ளூர் போட்டி கட்டாயம்! இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்குப்பிடி!

ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதில், ரோஹித் இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 116 இன்னிங்ஸ்களில் 4301 ரன்களும், 159 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 151 இன்னிங்ஸ்களில் 4231 ரன்களைக் குவித்துள்ளார்.

Follow Us