AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: விரைவில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.. உள்ளூர் போட்டி கட்டாயம்! இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்குப்பிடி!

IND vs NZ Test Series: பிசிசிஐயின் புதிய உத்தரவுப்படி, இந்திய வீரர்கள் சுப்மன் கில், கே.எல். ராகுல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரஞ்சி கோப்பை அல்லது சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த நியூசிலாந்து தொடர் தோல்விக்குப்பின், வீரர்களின் டெஸ்ட் போட்டி தயார்நிலையை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை. மருத்துவ காரணங்கள் தவிர, ஒவ்வொரு அனுபவ வீரரும் ஒரு ரெட்-பால் ஆட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

Team India: விரைவில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.. உள்ளூர் போட்டி கட்டாயம்! இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்குப்பிடி!
இந்திய டெஸ்ட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Sep 2026 19:57 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான (IND vs WI) ஒருநாள் போட்டியில் தற்போது இந்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மும்முரமாக உள்ளனர். அதேநேரத்தில், இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஜப்பானுக்குப் புறப்பட்டுவிட்டார். அதன்பிறகு, கே.எல்.ராகுல், சுப்மன் கில் மற்றும் பும்ரா ஆகியோர் ரஞ்சி கோப்பையில் தத்தமது அணிகளுக்காக விளையாடுவதைக் காணலாம். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் பின்னணியில் பிசிசிஐ பிறப்பித்த உத்தரவே, கில், ராகுல் மற்றும் பும்ரா ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ALSO READ: தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி.. கில்லுடன் முதலிடத்திற்கு போட்டி!

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் அறிக்கையின்படி, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு ஒவ்வொரு அனுபவ வீரரும் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ உத்தரவின்படி, சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தத்தமது மாநில அணிகளுக்காக ரஞ்சிப் போட்டிகளில் விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, வருகின்ற 2026 அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் ரஞ்சி டிராபியில், சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காகவும், கே.எல். ராகுல் கர்நாடகா அணிக்காகவும் விளையாடலாம். நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பு, ஜஸ்பிரித் பும்ராவும் இந்தியா ‘ஏ’ அணிக்காக ஒரு ரஞ்சி டிராபி போட்டியிலோ அல்லது ஒரு டெஸ்ட் போட்டியிலோ விளையாடுவார்.

இந்திய வீரர்கள் எத்தனை போட்டிகளில் விளையாட வேண்டும்..?

இந்திய டெஸ்ட் அணியின் இடம்பெற்றுள்ள வீரர்கள் எத்தனை சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடுவார் என்பது மருத்துவக் குழுவின் அனுமதி மற்றும் வீரரின் பணிச்சுமையைப் பொறுத்தது. சில வீரர்கள் 2 வடிவங்களிலும் விளையாடுகிறார்கள். எனவே, எந்தவித சமரசமும் இன்றி அவர்களை சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் அல்லது பணிச்சுமை தொடர்பான ஏதேனும் சிக்கல் இல்லாத பட்சத்தில், கேப்டன் கில் உட்பட ஒவ்வொரு அனுபவ இந்திய வீரரும் குறைந்தபட்சம் ஒரு சிவப்புப் பந்து போட்டியிலாவது விளையாடுவது கட்டாயமாகும்.

பிசிசிஐ-யின் இந்த முடிவு, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான தயாரிப்பு நடவடிக்கையாகும். இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி வருகின்ற 2026 நவம்பர் 19 முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும். டெஸ்ட் பயிற்சி இல்லாமல் தொடரில் பங்கேற்பதால் ஏற்படும் பின்விளைவுகள் வீரர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதை பிசிசிஐ உறுதிசெய்ய விரும்புகிறது. இதனால்தான், அனைத்து இந்திய வீரர்களும் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ரன் மழை பொழிந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.. இந்திய அணிக்கு எதிராக 405 ரன்கள் குவிப்பு!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் தொடர் 2024-ல் நடைபெற்றது. அது 3 போட்டிகள் கொண்ட தொடராகும். இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெற்றதில், நியூசிலாந்து அணி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் இந்தியா சந்தித்த முதல் டெஸ்ட் தொடர் தோல்வி இதுவாகும். இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, பிசிசிஐ நேரடியாக இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Follow Us