AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2027 அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

ICC ODI World Cup 2027 Schedule : 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த 2027 ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2027 அட்டவணை வெளியீடு: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Oct 2026 21:49 PM IST

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த 2027 ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் மொத்தம் 57 போட்டிகள் நடைபெற உள்ளன. உலகக் கோப்பை போட்டிகள் 2027 அக்டோபர் 2 அன்று தொடங்கி, நவம்பர் 21,2027 வரை நடைபெறவுள்ளன.

ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை கேப் டவுனில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், அக்டோபர் 1, 2026 இன்று வெளியிடப்பட்டது. இதில் ஒரு குரூப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றிலேயே நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

இதையும் படிக்க : ஆசிய விளையாட்டு போட்டி – ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! – இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

உலகக் கோப்பை அட்டவணையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் தகுதிச்சுற்று மூலம் வரும் ஒரு அணி இடம்பெறும்.

அதேபோல், குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் தகுதிச்சுற்று மூலம் வரும் மற்றொரு அணி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027 உலகக் கோப்பை போட்டிகள் மூன்று நாடுகளில் உள்ள 12 மைதானங்களில் நடைபெறவுள்ளன. அதன்படி தென்னாப்பிரிக்காவில் 8 மைதானங்களிலும், ஜிம்பாப்வேயில் 3 மைதானங்களிலும், நமீபியாவில் ஒரு மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்படவள்ளன.

2027 உலகக் கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. 24 ஆண்டுகளுக்குப் பிறகுத தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை போட்டியை நடத்தும் நாடுகள் என்பதால் தானாகவே தகுதி பெற்றுள்ளன.

இதையும் படிக்க : ICC ODI World Cup 2027: இன்று வெளியாகும் 2027 உலகக் கோப்பை அட்டவணை.. இந்தியாவில் எங்கு பார்க்கலாம்?

இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் ஐசிசி ஒருநாள் தரவரிசை அடிப்படையில் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளன. நமீபியா ஐசிசியில் உறுப்பினராக இல்லை என்பதால் போட்டியை நடத்தும் நாடாக இருந்தும் நேரடியாக தகுதி பெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள நாடுகள் தகுதிச்சுற்றுகள் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளன.

புதிதாக சூப்பர் 7 சுற்று

குறிப்பாக இந்த 2027 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் குரூப் சுற்றுகளுக்கு பிறகு புதிதாக சூப்பர் 7 என்ற புதிய சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளான 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று 0 இத்தொடர் தொடங்கி, நவம்பர் 21, 2027 நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் இது நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us