AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் யார்?

India vs Sri Lanka Test Series: இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் சிறப்பான சாதனையைத் தக்கவைப்பதை கில் நோக்கமாகக் கொண்டிருப்பார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டில் பல ஜாம்பவான் வீரர்கள் தங்கள் அணிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளனர். இந்தநிலையில், இந்தியா - இலங்கை அணிகளில் ஒவ்வொரு அணிக்கும் எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய கேப்டன்களை பற்றி தெரிந்து கொள்வோம். 

IND vs SL: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் யார்?
அர்ஜுன ரணதுங்கா - எம்.எஸ்.தோனி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Aug 2026 14:00 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு (IND vs SL) இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் சுப்மன் கில் இந்திய அணியை (Indian Cricket Team) வழிநடத்துவார். இலங்கைக்கு எதிரான இந்திய அணியின் சிறப்பான சாதனையைத் தக்கவைப்பதை கில் நோக்கமாகக் கொண்டிருப்பார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டில் பல ஜாம்பவான் வீரர்கள் தங்கள் அணிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளனர். இந்தநிலையில், இந்தியா – இலங்கை அணிகளில் ஒவ்வொரு அணிக்கும் எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய கேப்டன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: நிசான்கா விலகல்! யார் கேப்டன்? இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான இலங்கை அணி அறிவிப்பு!

அர்ஜுன ரணதுங்கா:

முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, ஒரு கேப்டனாக இந்தியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ரணதுங்கா இந்தியாவிற்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தினார். இந்த 13 போட்டிகளில் இலங்கை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதில், 5 போட்டிகளில் தோல்வியும், 8 போட்டிகளில் சமனும் கண்டது.

விராட் கோலி:

இலங்கைக்கு எதிராக இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். கோலி இலங்கை அணிக்கு எதிராக இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். கோலியின் தலைமையின் கீழ், இந்தியா இலங்கைக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஒன்றில் தோல்வியடைந்தது. மேலும், இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தன.

முகமது அசாருதீன்:

முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அசாருதீன் இலங்கைக்கு எதிரான 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார். அசாருதீனின் தலைமையின் கீழ், இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்று,3ல் சமன் செய்தது. மேலும், இவர் தலைமையில் இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்றதில்லை.

எம்.எஸ்.தோனி:

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனி, இலங்கைக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார். அவரது தலைமையின் கீழ், இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. தோனியின் தலைமையின் கீழ் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் சமனிலும் முடிந்தன.

கபில் தேவ்:

இலங்கைக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்தினார். அவரது கேப்டன்சியின் கீழ், இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.

ALSO READ: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. ஜியோ ஹாட்ஸ்டாரில் காண முடியாதா?

துலீப் மெண்டிஸ் – சங்கக்காராவும் தலா 6 போட்டிகள்:

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான துலீப் மெண்டிஸ், இந்தியாவிற்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். குமார் சங்கக்காராவும் இந்தியாவிற்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இருப்பினும், இந்தியாவிற்கு எதிரான அவரது சாதனை சிறப்பாக இல்லை. சங்கக்காராவின் கேப்டன்சியின் கீழ், இலங்கை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது, அதே நேரத்தில் 3 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தன.

Follow Us