AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG: இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடர்.. ரத்து செய்யப்பட்ட வங்கதேச தொடர்!

India vs Bangladesh T20 Series: கடந்த சில மாதங்களாக வங்கதேச வாரியம், இந்திய அணியின் சுற்றுப்பயணத்தை சாத்தியமாக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக, வாரியத்தின் தலைவரும் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனுமான தமிம் இக்பால், அந்நாட்டு அரசைத் தொடர்புகொண்டு, இந்த சுற்றுப்பயணத்திற்காக இந்திய அரசையும் பிசிசிஐ-யையும் சம்மதிக்க வைப்பதாகக் கூறினார்.

IND vs AFG: இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடர்.. ரத்து செய்யப்பட்ட வங்கதேச தொடர்!
இந்திய கிரிக்கெட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Aug 2026 18:16 PM IST

இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாராகி வருகின்றனர். இந்தத் தொடர் வருகின்ற 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கி 2026 ஆகஸ்ட் 27ம் தேதி வரை நடைபெறும். இந்தத் தொடருக்குப் பிறகு இந்திய அணி என்ன செய்யும் என்பதும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகளுக்கு இடையே வருகின்ற 2026 செப்டம்பர் மாதம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான விவரங்கள் உறுதியாகியுள்ளது.

ALSO READ: இந்திய அணியின் புதிய டி20 தொடர்.. தேதியை அறிவித்த ஆப்கானிஸ்தான்.. எப்போது தெரியுமா?

இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தில் சிக்கல்

கடந்த சில நாட்களாக நிலவி வந்த சாத்தியக்கூறுகள் மற்றும் யூகங்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 11ம் தேதி இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் அட்டவணையை அறிவித்து அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தொடரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும், இந்த 3 டி20 போட்டிகளும் இந்தியாவில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும்.

வங்கதேச தொடர் தொடர்ந்து 3வது ஆண்டாக ஒத்திவைக்கப்படுமா?

கடந்த சில மாதங்களாக வங்கதேச வாரியம், இந்திய அணியின் சுற்றுப்பயணத்தை சாத்தியமாக்க முயற்சி செய்து வருகிறது. இதற்காக, வாரியத்தின் தலைவரும் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனுமான தமிம் இக்பால், அந்நாட்டு அரசைத் தொடர்புகொண்டு, இந்த சுற்றுப்பயணத்திற்காக இந்திய அரசையும் பிசிசிஐ-யையும் சம்மதிக்க வைப்பதாகக் கூறினார். ஆனால், இந்திய வாரியம் இதுவரை இது குறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. வங்கதேசத்திற்கு எதிராக எந்தவொரு புதிய முன்மொழிவையும் அது முன்வைக்கவில்லை. இதன் காரணமாக, இந்த சுற்றுப்பயணம் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக ரத்து செய்யப்படவுள்ளது. முன்னதாக, இந்த சுற்றுப்பயணம் 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டது.

ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான புது ரூல்.. பஞ்சாயத்தை கிளப்பும் இரு நாடுகள்.. ஐசிசி முடிவு என்ன?

பாதுகாப்புக் காரணங்களுக்காக, இந்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் மற்றும் டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசம் தனது பெயரை விலக்கிக் கொண்டது. பாதுகாப்பு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவில் போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும், இந்திய வெளியுறவு அமைச்சரிடமும் பேசவிருப்பதாகவும் அமினுல் ஹக் கூறினார். ஆனால் இந்தப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஒத்திவைக்கப்பட்டு வரும் இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தை எப்படியாவது நடத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.

Follow Us