AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG: இந்திய அணியின் புதிய டி20 தொடர்.. தேதியை அறிவித்த ஆப்கானிஸ்தான்.. எப்போது தெரியுமா?

India vs Afganistan T20 Series: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடரின் 3 போட்டிகளும் 2026 செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) இந்தத் தேதிகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IND vs AFG: இந்திய அணியின் புதிய டி20 தொடர்.. தேதியை அறிவித்த ஆப்கானிஸ்தான்.. எப்போது தெரியுமா?
இந்தியா - ஆப்கானிஸ்தான்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Aug 2026 21:57 PM IST

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு (IND vs AFG T20 Series) இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதிகளை அறிவித்துள்ளது. இந்தத் தொடர் டெல்லியில் நடைபெறும். இந்தியாவும் (Indian Cricket Team) ஆப்கானிஸ்தானும் கடந்த 2026 ஜூன் மாதம் ஒரு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. தற்போது, ​​இரு அணிகளும் டி20 தொடருக்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ALSO READ: இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர்.. ஜியோ ஹாட்ஸ்டாரில் காண முடியாதா?

இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர்:


கிரிக்பஸ்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான டி20 தொடர் 2026 செப்டம்பரில் மாதம்  நடைபெறும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 10ம் தேதி சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்தத் தொடரின் 3 போட்டிகளும் 2026 செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) இந்தத் தேதிகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரியத்தின் வர்த்தகப் பங்காளிகளுக்கு எழுதிய கடிதத்தில், ஏசிபி தலைமை நிர்வாக அதிகாரி நசீப் கான் அந்த அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் இந்திய சுற்றுப்பயணம் 2026 செப்டம்பர் 13 முதல் 2026 செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்பதை ஆப்கானிஸ்தான் வாரியம் உறுதி செய்கிறது. மேலும், இந்த நிகழ்வின் தேதிகள் பிசிசிஐ-யிடம் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், திட்டமிடப்பட்ட போட்டிகளுக்கான இடங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வாரியம் தெளிவுபடுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

ALSO READ: தீவிர பயிற்சியில் சுப்மன் கில் படை.. ஆடுகளத்தில் அசால்ட் செய்யும் பந்துவீச்சாளர்கள்!

இந்திய அணியால் ஆப்கானிஸ்தானுக்குப் பயணிக்க முடியாததால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புது தில்லியில் இந்தத் தொடரை ஏற்பாடு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் இந்த வடிவத்தில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்விகளைச் சந்தித்தது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே இந்திய அணியைத் தோற்கடித்தன.

Follow Us