மூன்று நாட்களில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 11.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Google Pixel 11 Smartphone | கூகுள் நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கூகுள் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
கூகுள் (Google) நிறுவனம் ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் புதிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளது. ஐபோன்களுக்கு பிறகு மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக கூகுள் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கூகுள் நிறுவனம் இன்னும் மூன்று நாட்களில் தனது கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனை (Google Pixel 11 Smartphone) அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூன்று நாட்களில் அறிமுகமாகும் கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன்
கூகுள் நிறுவனம் தனது நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது கூகுள் பிக்சல் 11 (Pixel 11), பிக்சல் 11 ப்ரோ (Pixel 11 Pro), பிக்சல் 11 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 11 Pro XL) மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு (Pixel 11 Pro Fold) ஆகிய ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்ய உள்ளது. கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் விலை சற்று அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஐபோன்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கும் பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்!
மெமரி சிப்களின் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன்களின் விலைகளும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 10 மாடல் ஸ்மார்ட்போனை விட 100 டாலர்கள் அதிகம் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 11 – விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் ரூ.85,600-க்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,04,600-க்கும், பிக்சல் 11 ப்ரோ எக்ஸ் எல் ஸ்மார்ட்போன் ரூ.1,23,678-க்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும், கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டு ஸ்மார்ட்போன் ரூ.1,80,804-க்கும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.