IPL 2026: தகுதிச்சுற்று 2 போட்டியில் மழைக்கு வாய்ப்பு! போட்டி ரத்தா? பைனலுக்கு செல்வது யார்?
GT va RR Qualifier 2: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியின் போது மழை குறுக்கிட்டால், அதே நாளில் முடிவை உறுதி செய்வதற்காக 120 நிமிடங்கள் கூடுதல் நேரம் சேர்க்கப்பட்டு, போட்டியை அன்றே முடிக்க போட்டி பிசிசிஐ முயற்சி செய்யும்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) முதல் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியானது இன்று அதாவது 2026 மே 29ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR vs GT Qualifier 2) அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற 2026 மே 31ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ளும்.
ALSO READ: ரோஹித் முதல் எம்.எஸ். தோனி வரை.. ஐபிஎல் 2026 சீசனில் மோசமாக செயல்பட்ட ஆடும் லெவன்..!
2வது தகுதிச்சுற்றில் மழை பெய்தால் யாருக்கு சாதகம்..?
ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான இன்றைய தகுதிச்சுற்று 2 போட்டியில் மழை பெய்தால், முடிவு எப்படித் தீர்மானிக்கப்படும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இன்றைய போட்டி கைவிடப்பட்டால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எதுவாக இருக்கும் என்பதே முடிவை விட முக்கியமானது. தகுதிச்சுற்று 2-ல் மழை பெய்தால் பின்பற்ற வேண்டிய ஐபிஎல் விதிகள் இதோ.




குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியின் போது மழை குறுக்கிட்டால், அதே நாளில் முடிவை உறுதி செய்வதற்காக 120 நிமிடங்கள் கூடுதல் நேரம் சேர்க்கப்பட்டு, போட்டியை அன்றே முடிக்க போட்டி பிசிசிஐ முயற்சி செய்யும். இன்று அதாவது 2026 மே 29ம் தேதி குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 5 ஓவர்கள் ஆட்டம் நடைபெற முயற்சி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 5 ஓவர்கள் கூட நிறைவடையவில்லை என்றால், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும்.
ALSO READ: ஐபிஎல் தகுதிச்சுற்று 2.. சூர்யவன்ஷிக்கு தனி பவுலிங் பிளான்.. குஜராத் பயிற்சியாளர் சொன்ன விஷயம்!
இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்?
தகுதிச்சுற்று 2, ஒரு பந்து கூட விளையாடப்படாமல் கைவிடப்பட்டால், புள்ளி அட்டவணையில் சிறந்த நிலையில் உள்ள அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். குஜராத் டைட்டன்ஸ் இரண்டாம் இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் நான்காம் இடத்தையும் பிடித்ததால், குஜராத் டைட்டன்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பிளேஆஃப் போட்டியில் சந்திப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன்பு ராஜஸ்தானும், குஜராத் அணியும் மோதிய ஒரே பிளேஆஃப் போட்டி, ஐபிஎல் 2022-ன் குவாலிஃபையர் 1 ஆகும். அந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.