AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

GT vs RR – வரலாற்றில் அதிக முறை வென்ற அணி எது? யாருக்கு சாதகம்?

IPL 2026 : குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் படைத்த சாதனைகள் தற்போது கவனம் ஈர்த்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

GT vs RR  – வரலாற்றில் அதிக முறை வென்ற அணி எது? யாருக்கு சாதகம்?
வைபவ் சூர்யவன்ஷி - சாய் சுதர்ஷன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 May 2026 18:22 PM IST

ஐபிஎல் 2026 தொடரின் முக்கியமான குவாலிபையர் 2 போட்டியில் மே 29, 2026 நாளை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி நியூ சந்திகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, குவாலிபையர் போட்டியில் ஆர்சிபியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் ஆர்சிபி அணி பேட்டிங் பவுலிங் என சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது குவாலிபையர் 2 போட்டியில் களமிறங்குகிறது.

இதையும் படிக்க : IPL 2026: மே மாதம் வாட்டி வதைக்கும் வெயில்..! செப்டம்பர் மாதத்தில் மாறுகிறதா ஐபிஎல்..? வெளியான தகவல்!

மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக அந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வரலாற்றில் அதிக முறை வென்ற அணி எது?

இந்நிலையில், இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் படைத்த சாதனைகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்துகிறது.

இதையும் படிக்க : IPL 2026: சிஎஸ்கே அணிக்காக வழிகாட்டியாக வரும் தோனி.. அணி நிர்வாகம் சூசக தகவல்!

குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ரஷித் கான், முகமது சிராஜ் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக சாய் சுதர்சன் இந்த சீசனில் தொடர்ந்து ரன்கள் குவித்து வருவது அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரேல், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், இரு அணிகளும் முழு பலத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் பங்கேற்கப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இந்தபோட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow Us