AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மே மாதம் வாட்டி வதைக்கும் வெயில்..! செப்டம்பர் மாதத்தில் மாறுகிறதா ஐபிஎல்..? வெளியான தகவல்!

IPL Shifting to September October: 2026ம் ஆண்டு கோடை காலத்தில் இந்தியாவில் கடும் வெப்ப அலை சாதனை படைத்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக வெளியே செல்வது கடினமாகியுள்ளது. தென்னிந்தியாவில் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மே மாதத்தில் வெப்பநிலை தாங்க முடியாததாக மாறியுள்ளது. இது ஐபிஎல் போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களின் வருகையைப் பாதித்துள்ளது.

IPL 2026: மே மாதம் வாட்டி வதைக்கும் வெயில்..! செப்டம்பர் மாதத்தில் மாறுகிறதா ஐபிஎல்..? வெளியான தகவல்!
ஐபிஎல் அட்டவணை மாற்றம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 May 2026 18:19 PM IST

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வருகின்ற 2026 மே 31ம் தேதி நடைபெறும். கடந்த 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 2026 சீசன், வருகின்ற 2026 மே 31ம் தேதி முதல் முடிவடையும். இதில் மொத்தம் குவாலிஃபையர், எலிமினேட்டர், பைனல் உள்பட 74 போட்டிகள் நடைபெறும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது, மற்ற அணி தகுதிச்சுற்று 2-ஆம் சுற்றிலிருந்து தெரியவரும். இந்த நிலையில், யார் சாம்பியன் ஆவார்கள் என்பது வருகின்ற 2026 மே 29ம் தேதி குவாலிஃபையர் 2 போட்டிக்கு பிறகு தெரியவரும். இந்தநிலையில், பிசிசிஐ (BCCI) வருகின்ற 2027 ஐபிஎல் சீசனுக்கான திட்டமிடலைத் தொடங்கிவிட்டது.

அதன்படி, ஐபிஎல் 2027 தொடரை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய ஐபிஎல் தலைவர் அருண் தூமல் மே மாதத்தில் அதிக வெப்பம் நிலவுவதால், அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்தார்.

ALSO READ: வெளியேறப்போவது யார்..? எலிமினேட்டரில் மோதும் ஹைதராபாத் – ராஜஸ்தான்.. ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

கடும் வெப்ப அலை:

2026ம் ஆண்டு கோடை காலத்தில் இந்தியாவில் கடும் வெப்ப அலை சாதனை படைத்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக வெளியே செல்வது கடினமாகியுள்ளது. தென்னிந்தியாவில் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மே மாதத்தில் வெப்பநிலை தாங்க முடியாததாக மாறியுள்ளது. இது ஐபிஎல் போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களின் வருகையைப் பாதித்துள்ளது . இது மட்டுமல்லாமல், இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீரர்களின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தொடரின் கால அளவை மாற்றுவது குறித்தும் பேச்சு அடிபடுகிறது.

ஸ்போர்ட்ஸ்டார் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ஐபிஎல் தலைவர் அருண் தூமல் கூறியதாவது, ”நாங்கள் ஒளிபரப்பாளர்களுடன் அமர்ந்து, போட்டியை வேறு நேரத்திற்கு மாற்ற முடியுமா என்பது குறித்து விவாதிக்க வேண்டும். செப்டம்பர்-அக்டோபர் மாதங்கள் ஒரு பரிந்துரையாக உள்ளது. ஏனெனில், அது தீபாவளி சமயத்தில் வருவதாலும், விளம்பரதாரர்களுக்கு உகந்த நேரமாக இருப்பதாலும் அதுவே சிறந்ததாகும். அடுத்த இருதரப்பு ஏல செயல்முறையின் போது இந்த நேரம் கிடைக்குமா என்று பார்ப்போம்.” என்றார்.

ALSO READ: சிஎஸ்கே அணிக்காக வழிகாட்டியாக வரும் தோனி.. அணி நிர்வாகம் சூசக தகவல்!

2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் சீசனிலிருந்தே ஐபிஎல் தொடரானது மார்ச் முதல் மே வரை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நடந்த இரண்டு சீசன்களும் வேறு விதமாகத் திட்டமிடப்பட்டன. எனவே, இந்தத் தொடரின் அட்டவணையை மாற்றுவது தோன்றுவது போல் அவ்வளவு எளிதல்ல. அப்படியென்றால், இந்த சீசனை 2 கட்டங்களாக நடத்துவது சாத்தியமா? மற்றொரு மாற்று வழியும் முன்வைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் அதிகரிக்கும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொடரை பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலும், பின்னர் அந்த ஆண்டின் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களிலும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை வாரியம் ஆராய்ந்து வருகிறது. இருப்பினும், செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் பருவ மழையும் பெய்யும் என்பதால் பிசிசிஐ இதுகுறித்து ஆலோசனை செய்யும்.

Follow Us