AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: வெளியேறப்போவது யார்..? எலிமினேட்டரில் மோதும் ஹைதராபாத் – ராஜஸ்தான்.. ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

SRH vs RR Eliminator: ஐபிஎல் வரலாற்றை பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை மொத்தம் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தப் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 14 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

IPL 2026: வெளியேறப்போவது யார்..? எலிமினேட்டரில் மோதும் ஹைதராபாத் – ராஜஸ்தான்.. ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராஜஸ்தான்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 May 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) எலிமினேட்டர் போட்டியில் இன்று அதாவது 2026 மே 27ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இந்த போட்டியானது புதிய சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். எலிமினேட்டர் போட்டியில் தோற்கும் அணி, ஐபிஎல் சீசனிலிருந்து வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி, குவாலிஃபையர் 1 போட்டியில் தோற்கும் அணியை எதிர்கொண்டு, பின்னர் இறுதிப் போட்டியில் இடம்பிடிக்க கடுமையாக போட்டியிடும். ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியானது வருகின்ற 2026 மே 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளின் ஆடும் லெவன் மற்றும் பிட்ச் ரிப்போர்ட் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பவர்பிளேயில் அதிக சிக்ஸர்களை அடித்த அணி எது? கெத்து காட்டும் சூர்யவன்ஷி!

ஐபிஎல் 2026-ல் இரு அணிகளின் செயல்பாடு:

இந்த ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தாங்கள் விளையாடிய 14 லீக் போட்டிகளில் ஒன்பதில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அபாரமாகச் செயல்பட்டது. மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர். தங்களது கடைசிப் போட்டியில் ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனை

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 2 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றை பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை மொத்தம் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தப் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 14 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இரு அணிகளுக்கும் இடையிலான எந்தப் போட்டியும் சமனில் முடியவில்லை, டிராவிலும் முடியவில்லை.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பிளேயிங் லெவன்

அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, ஸ்மரன் ரவிச்சந்திரன், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன்

இம்பாக்ட் வீரர்: டிராவிஸ் ஹெட்

ALSO READ: எலிமினேட்டர் சுற்றில் மழை எச்சரிக்கை.. மோதும் SRH vs RR.. யாருக்கு சாதகம் இது?

ராஜஸ்தான் ராயல்ஸின் பிளேயிங் லெவன்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டோனோவன் ஃபெரீரா, ஷுபம் துபே, தசுன் ஷனகா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நந்த்ரே பர்கர், யஷ்ராஜ் புஞ்சா, பிரிஜேஷ் சர்மா

இம்பாக்ட் வீரர்: ரவீந்திர ஜடேஜா

 

Follow Us