IPL 2026: ஐபிஎல்லில் மிக மெதுவாக அரைசதம்.. முதலிடத்தில் வெளிநாட்டு வீரர்..!
IPL Slowest Half-Centuries: கடந்த 2009 ஐபிஎல் சீசனில்தான் மிக மெதுவான அரைசதம் அடிக்கப்பட்டது. இந்த மோசமான சாதனை படைக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. எந்தவொரு பேட்ஸ்மேனும் இந்த விரும்பத்தகாத சாதனையை முறியடிக்க விரும்ப மாட்டார். அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன இன்றைய ஐபிஎல் தொடரில், இதுபோன்ற ஒரு சாதனையை முறியடிப்பது சாத்தியமற்றதாகத் தெரிகிறது.
ஐபிஎல் (IPL 2026) என்றாலே அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போன ஒரு லீக். கடந்த சீசனில், அதாவது 2025 ஐபிஎல் சீசனில் சில அணிகள் 300 ரன்கள் என்ற இலக்கை தவறவிட்டனர். 2024 மற்றும் 2025 சீசன்களில் பல அணிகள் பலமுறை 250க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தனர். ஆனால், இந்த வேகமான ஐபிஎல் தொடருக்கு மத்தியில், ஐபிஎல் சீசன்களில் இதுவரை மிகவும் மெதுவாக அரைசதம் அடித்த முதல் 7 பேட்ஸ்மேன்கள் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். மிக மெதுவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் வெளிநாட்டு வீரர் (Overseas Player) ஒருவர் முதலிடத்தில் இருக்கிறார்கள். அதேநேரத்தில், முதல் 7 பேட்ஸ்மேன்களில் 3 இந்திய வீரர்களும் உள்ளனர்.
கடந்த 2009 ஐபிஎல் சீசனில்தான் மிக மெதுவான அரைசதம் அடிக்கப்பட்டது. இந்த மோசமான சாதனை படைக்கப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. எந்தவொரு பேட்ஸ்மேனும் இந்த விரும்பத்தகாத சாதனையை முறியடிக்க விரும்ப மாட்டார். அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன இன்றைய ஐபிஎல் தொடரில், இதுபோன்ற ஒரு சாதனையை முறியடிப்பது சாத்தியமற்றதாகத் தெரிகிறது.
ALSO READ: பர்பிள் கேப் பந்தயம்.. ஐபிஎல்லில் வெல்லாத 5 ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள்!
பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் யார்?
ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரான ஜே.பி. டுமினி முதலிடத்தில் உள்ளார். கடந்த 2009ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது, 55 பந்துகளில் ஜே.பி. டுமினி தனது அரைசதத்தை எட்டினார். அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவான அரைசதம் அடித்த சாதனை டுமினியின் வசம் உள்ளது.
அதனை தொடர்ந்து பார்த்திவ் படேல், ராபின் உத்தப்பா மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். தற்போது இந்த 3 பேட்ஸ்மேன்களும் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கவுதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். அதேநேரத்தில், பார்த்திவ் படேலும் ராபின் உத்தப்பாவும் வர்ணனை செய்து வருகின்றனர்.
ALSO READ: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? முதலிடத்தில் இந்த வீரரா?
ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மெதுவான அரைசதம்:
- ஜேபி டுமினி (மும்பை இந்தியன்ஸ்) – 55 பந்துகள் (2009)
- பார்த்தீவ் படேல் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 53 பந்துகள் (2010)
- பிரெண்டன் மெக்கல்லம் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – 52 பந்துகள் (2010)
- ராபின் உத்தப்பா (புனே வாரியர்ஸ்) – 52 பந்துகள் (2021)
- ஜாக் காலிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – 51 பந்துகள் (2009)
- மேத்யூ ஹேடன் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 51 பந்துகள் (2009)
- கவுதம் கம்பீர் (டெல்லி டேர்டெவில்ஸ்) – 51 பந்துகள் (2010)
ஐபிஎல்-லில் அதிவேக அரைசதம்:
ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் வசம் உள்ளது. கடந்த 2023 ஐபிஎல் சீசனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்தார்.


