Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்..

VCK Leader Thirumavalavan: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்ககூடிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட சூழல் உருவாகலாம்; அதாவது வாக்கு திருட்டு முயற்சிகள் நடைபெறலாம்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்..
திருமாவளவன்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Sep 2025 13:44 PM

பெரம்பலூர், செப்டம்பர் 1, 2025: தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் முறைகேட்டில் ஈடுபடக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஏழு மாத காலத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முக்கோணப் போட்டி நிலவி வருகிறது. தற்போது அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்களும் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், மத்திய அரசு தரப்பில் பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேவேளையில், தமிழகத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கக்கூடிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியானது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழர்களின் வாக்குகள் திருடப்படலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடைபெறலாம் – திருமாவளவன்:

இந்த நிலையில், பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ”ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெறுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எடுத்துரைத்து வருகிறார் என்றார். கர்நாடகாவில் இலட்சக்கணக்கில் வாக்கு திருட்டு நடந்திருப்பதை ஆதாரத்துடன் அவர் அம்பலப்படுத்தினார். தற்போது பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக அவர் மேற்கொண்டுள்ள பயணம் வெற்றி பெற வேண்டும். இந்த பயணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ள இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை.

மேலும் படிக்க: உடலில் அரிப்பு, வீக்கம்.. பறிபோன இளம்பெண் உயிர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட சூழல் உருவாகலாம்; அதாவது வாக்கு திருட்டு முயற்சிகள் நடைபெறலாம். பாஜக மற்றும் சங்க் பரிவார் அமைப்புகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

பாஜக கட்டுப்பாட்டில் இயங்கும் தேர்தல் ஆணையம்:

எனவே, தமிழ்நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பெயர்களை நீக்குவது, சேர்ப்பது, அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இங்குள்ள வாக்காளர் பட்டியலில் இணைப்பது என இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு அநீதியை பாஜக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

மேலும் படிக்க: திருச்செந்தூர் கோயில் போறீங்களா? கிரகணத்தன்று நடை அடைப்பு.. எப்போது தெரியுமா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடைசி வரை நாடாளுமன்றத்தில் பீகாரின் சிறப்பு வாக்காளர் திருத்தம் பற்றி அவர்கள் விவாதிக்கவில்லை. அதேபோல், 30 நாட்கள் சிறையில் இருந்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியை பறிக்கும் சட்டத்துறை என்பது பாசத்தின் உச்சம் என அவர் பேசியுள்ளார்.