Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்செந்தூர் கோயில் போறீங்களா? கிரகணத்தன்று நடை அடைப்பு.. எப்போது தெரியுமா?

Tiruchendur Murugan Temple : திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்பிறகு, 2025 செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில் போறீங்களா? கிரகணத்தன்று நடை அடைப்பு.. எப்போது தெரியுமா?
திருச்செந்தூர் கோயில்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Sep 2025 09:20 AM

தூத்துக்குடி, செப்டம்பர் 01 : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதி பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2025 செப்டம்பர் 7ஆம் தேதி அன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு, தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  சந்திரகிரகணத்தையொட்டி,  திருச்செந்தூர் கோயில் நடை அடைக்கப்படுகிறது.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பல்லேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள்.

குறிப்பாக, குறிப்பாக, வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை, சஷ்டி, கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட விஷேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூடி கொடுத்தும், காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து வருகின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க நின்று, முருகனை தரிசித்து வருகின்றனர்இந்த நிலையில், 2025 செப்டம்பர் 7ஆம் தேதி அன்று பிற்பகலில் திருச்செந்தூர் கோயல் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also Read : பக்தர்களே கவனிங்க.. கிரகணத்தன்று திருப்பதி கோயில் நடை அடைப்பு.. எப்போது தெரியுமா?

கிரகணத்தன்று திருச்செந்தூர் கோயில் நடை அடைப்பு

அதாவது, சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிமணிய சுவாமி கோயிலில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சந்திர கிரகணம் 2025 செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுகிழமை நிகழ உள்ளது.

இதனையொட்டி, இக்கோயிலில் அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 2 மணிக்கு சாயரட்சை, பிற்பகல் 3 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து பள்ளியறை பூஜைகள் நடைபெற்று, மாலை 5 மணிக்கு கோயில் நடை திருக்காப்பிடப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஒரு மாதம் இலவச ஆன்மீக பயணம்.. பக்தர்களே மிஸ் பண்ணாதீங்க.. வெளியான சூப்பர் அறிவிப்பு

எனவே, அன்றைய தினம் பிற்பகல் 2 மணி வரை 100 ரூபாய் தரிசனம், மூத்த குடிமக்கள் செல்லும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 2025 செப்டம்பர் 1ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு, 2025 செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.