Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பக்தர்களே கவனிங்க.. கிரகணத்தன்று திருப்பதி கோயில் நடை அடைப்பு.. எப்போது தெரியுமா?

Tirumala Tirupati Temple : திருப்பதி எழுமலையான் கோயில் நடை 2025 செப்டம்பர் 7ஆம் தேதி அடைக்கப்படுகிறது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு, அன்றைய தினம் கோயில் நடை பிற்பகல் 3.30 மணிக்கு அடைக்கப்பட்டு, மறுநாள் 2025 செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பக்தர்கள் 2025 செப்டம்பர் 8ஆம் தேதி காலை 6 மணி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்களே கவனிங்க.. கிரகணத்தன்று திருப்பதி கோயில் நடை அடைப்பு.. எப்போது தெரியுமா?
திருப்பதி எழுமலையான் கோயில்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 Aug 2025 11:35 AM

ஆந்திரா, ஆகஸ்ட் 27 : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி எழுமலையான் (Tirumala Tirupati) கோயில் 2025 செப்டம்பர் 7ஆம் தேதி மூடப்படுவதாக தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanam) அறிவித்துள்ளது. அன்றைய தினம் சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி எழுமலையான் கோயில் நடை மூடப்படுகிறது. இதனால், அதற்கு பக்தர்கள் தங்கள் தரிசனங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி எழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உலக நாடுகளில் இருந்து ப்கதர்கள் வருகை தருகின்றனர். திருப்பதி சென்றால் திருப்பம ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரியும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆந்திர மாநில அரசு, திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை இணைந்து பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி தொடங்கி அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது. மேலும், பக்தர்களுக்கு ஏற்ப சிறப்பு தரிசனம் போன்றவற்றையும் அறிவித்து வருகிறது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 7ஆம் தேதி திருப்பதி எழுமலையன் கோயில் நடை அடைக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு, அன்றயை தினம் கோயில் நடை அடைக்கப்படுகிறது. 2025 செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கோயில் நடை முடப்பட்டு, செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும நடை திறக்கப்படுகிறது.

Also Read : தடைகளை நீக்கும் ஈச்சனாரி விநாயகர் கோயில்.. மிஸ் பண்ணாதீங்க

கிரகணத்தன்று திருப்பதி கோயில் நடை அடைப்பு

கோயில் நடை திறக்கப்பட்டவுடன் பரிகார பூஜை, தூய்மைப்படுத்தும் சடகுகள் செய்யப்படும். அதன்பிறகு, பக்தர்கள் 2025 செப்டம்பர் 8ஆம் தேதி காலை 6 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பஞ்சாங்கத்தின்படி, சந்திர கிரகணம் இரவு 9:50 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.31 மணிக்கு முடிவடைகிறது.

எனவே, 2025 செப்டம்பர் 7ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படுவதையொட்டி, ஊஞ்சல் சேவா, அர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கர சேவா போன்ற சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அன்னதான வளாகமும் செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மூடப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read : ஆத்தாடி.. திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!

2025ஆம் ஆண்டு முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7-8 காலை 9.56 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. பொதுவாகவே கிரகணம் என்றால் கோயில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆன்மீக மரபுகளின்படி, கிரகண காலத்தில் கோயில்களில் சடங்குகள் எதுவும் செய்யக் கூடாது என நம்பப்படுகிறது. இதனால் அன்றைய தினம் அனைத்து கோயில்களின் நடையும் சாத்தப்படுகிறது. எனவே, திருப்பதி கோயில் நடையும் அடைக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் அதற்கு ஏற்ப தங்களது  தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.