ஆத்தாடி.. திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!
Tirumala Tirupati Temple : திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் நன்கொடுடையாக ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்கத்தை வழங்கியுள்ளார். ஏழுமலையானின் அருளால் தனது தொழில் வெற்றி கண்டதாக அவர் நம்புவதால் தினமும் சுமார் 120 கிலோ தங்க நகை அணியும் ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடுடையாக வழங்கினார்.

திருப்பதி, ஆகஸ்ட் 20 : திருப்பதி ஏழுமலையானுக்கு (Tirumala Tirupati) ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். இது தகவலை முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஏழை எளிய மக்கள் தொடங்கி உலக அளவில் தொழிலதிபர் வரை தினசரி வருகை தருவார்கள். திருப்பதி சென்றால் திருப்பம ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரியும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திர மாநில அரசு, திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை இணைந்து பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி தொடங்கி அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்தி வருகின்றனர். அம்பானி போன்ற தொழிலதிபர்கள் தங்கம், வைரம் என காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் அனைவரையும் ஆச்சிரமூட்டும் வகையில், பக்தர் ஒருவர் ஏழுமலையானுக்கு 121 கோடி தங்கை நன்கொடுடையாக வழங்கி உள்ளார். இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிர்ந்துள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரியில் வறுமை ஒழிப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
Also Read : பக்தர்களே கவனிங்க… பழனி முருகன் கோயில் நாளை முதல் ரோப் கார் சேவை!
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். அவர் பேசுகையில், “பக்தர் ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டார். அதுபோன்ற தொழிலை தொடங்கி, அதில் அவர் வெற்றிறை கண்டிருக்கிறார். அவர் தனது நிறுவன பங்குகளை விற்று ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் பார்த்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி அந்தச் செல்வங்களை அவருக்குக் கொடுத்ததால், ஏழுமலையானுக்கே அதனை திருப்பி கொடுக்க முடிவு செய்தார். இதனால், அந்த பக்தர் ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்குகிறார்” என தெரிவித்தார். தற்போது, ஏழுமலையானுக்கு மூலவர் சிலையில் தினமும் 120 கிலோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த பக்தர், ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்கம் வழங்க உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
Also Read : கோயில்களில் இனி இந்த பொருட்களுக்கு தடை.. பக்தர்களே நோட் பண்ணுங்க.. அறநிலையத்துறை அறிவிப்பு!
முன்னதாக, 2025 மே மாதம் தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்கா என்பவர் ரூ.3.63 கோடி மதிப்பில் வைரம் பதிந்த தங்க நகையை நன்கொடையாக வழங்கினார். 2025 ஜூலை மாதம் சென்னையைச் சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.2.4 கோடி மதிப்பில் 2.5 கிலோ எடையுள்ள தங்கத்தை நன்கொடுடையாக அளித்தது. ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி ஒய்.வி.எஸ்.எஸ். பாஸ்கர் ராவ் 2025 ஜனவரி மாதத்தில் ரூ.3.66 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.