Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Money Management: வாழ்க்கையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் பணப்பிரச்னை இருக்காது!

வாழ்க்கையில் அனைவருக்கும் பணம் என்பது தேவையாக இருக்கிறது. சில நிதி நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் நீண்டகால செழிப்பை அடையலாம். சம்பாதித்ததை ரகசியமாக வைத்திருத்தல், புத்திசாலித்தனமான செலவு உள்ளிட்ட ஐந்து முக்கிய விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் யாரிடமும் பணத்தை எதிர்பார்க்க வேண்டிய சூழல் இருக்காது என சொல்லப்படுகிறது.

Money Management: வாழ்க்கையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் பணப்பிரச்னை இருக்காது!
பண சேமிப்பிற்கான வழிகள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 05 Aug 2025 18:05 PM

இந்த உலகில் உயிர்வாழ எது தேவை என கேட்டால் இன்றைய காலக்கட்டத்தில் முதலில் பெரும்பாலானோர் பதிலாக வருவது பணம் தான். எந்த நேரமாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் தேவையாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மையாகும். மனித உயிர்வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் பணம் மிகவும் முக்கியமானது என்றாலும் அது மட்டுமே தேவை இல்லை என்பதை உணர வேண்டும். ஆனால் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒருவர் சேமிக்க வேண்டும் என்று ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நிதியில் கூறினார். இதனை செய்வதால் உங்கள் வீட்டில் ஒருபோதும் பணப் பற்றாக்குறை இல்லை என்ற சூழல் உருவாகும். அப்படியாக சாணக்கியர் சொல்லும் இந்த ஐந்து விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் பணம் தேவை. அது இல்லையென்றால் மனதிற்குள் கவலை ஏற்படும். சில விஷயங்களை நாம் பின்பற்றுவதன் மூலம், யார் வேண்டுமானாலும் நிதி ரீதியாக வலிமை பெறலாம் என சாணக்கியர் கூறுகிறார்.  அவர் தனது நெறிமுறைகளில் கூறிய விஷயங்கள் இன்றும் பயன்படும் அளவுக்கு உள்ளது. அதேசமயம் ஒருவருக்கு செல்வம் கடின உழைப்பால் மட்டுமல்ல, புத்திசாலித்தனத்தாலும் சரியான அணுகுமுறையாலும் கிடைக்கும்.  எனவே உங்கள் வீட்டில் ஒருபோதும் பணப் பிரச்சினைகள் இருக்கக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் இந்த விஷயங்களை கண்டிப்பாக அறிய வேண்டும்.

Also Read:  வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!

அந்த 5 விஷயங்கள் என்னென்ன?

முதலில் நீங்கள் சம்பாதித்த செல்வத்தைப் பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள். ஏனென்றால் உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் பெறூம் சம்பாத்தியத்தைப் பார்த்து பொறாமைப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடலாம். எனவே உங்கள் சம்பளம், நிதி நிலைமையையும் முடிந்தவரை ரகசியமாக வைத்திருங்கள். மேலும் எக்காரணம் கொண்டும் புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். அதேபோல் பணத்தை தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்துங்கள். வீணாகச் செலவிடாதீர்கள். பணத்தைச் சேமிப்பதுதான் செல்வத்தை சேமிப்பதற்கான முதல் படியாகும்.

அதேசமயம் உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள். ஒருவேளை நீங்கள் செலவிட விரும்பினால் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக செலவு செய்யக்கூடாது என்பதை உணர வேண்டும். காரணம் அதிகமாக செலவு செய்வது கடனுக்கு வழிவகுக்கும். அது உங்கள் மன சமநிலையையும் பாதிக்கும். எனவே, உங்கள் வருமானத்திற்கு ஏற்ப மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

Also Read: வாழ்க்கையில் இந்த 3 விஷயங்கள் மோசமான விளைவுகளை தரும்.. கவனமா இருங்க!

பணம் சம்பாதிக்கும் ஞானம் உள்ளவர்கள் எங்கும், எந்த சூழ்நிலையிலும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதில் நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும்.  எனவே எந்த நேரத்திலும் பணம் சம்பாதிப்பதற்கான செயல்முறையைக் கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் தயாராக இருங்கள். கடினமான காலங்களில் உங்களை ஆதரிக்க சேமிப்பு தான் கைக்கொடுக்கும்.   நீங்கள் பணம் பெறும்போதெல்லாம், அதில் சிறிது பணத்தை எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், யார் பணத்தையும் எதிர்பார்க்காமல் சேமிப்பில் இருந்து பயன்படுத்தலாம்.

(சாணக்ய நீதி சாஸ்திரத்தில் இருந்து வாழ்க்கை நெறிமுறைகள் அடிப்படையில் இக்கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எதற்கும் பொறுப்பேற்காது)