Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: குடும்ப ஆரோக்கியம்.. கவனிக்க வேண்டிய 8 வாஸ்து விஷயம்!

Vastu TIps In Tamil: வாஸ்து சாஸ்திரம், ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் முக்கியம். தூங்கும் திசை, படுக்கை அறை, கழிப்பறை, கண்ணாடி, சமையலறை, சூரிய ஒளி, வடகிழக்கு மூலை, மற்றும் நீர் தொட்டி ஆகியவற்றின் சரியான அமைவிடம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

Vastu Tips: குடும்ப ஆரோக்கியம்.. கவனிக்க வேண்டிய 8 வாஸ்து விஷயம்!
வாஸ்து டிப்ஸ்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 06 Jul 2025 14:46 PM

பொதுவாக ஆன்மிகத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. வீட்டில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ விரும்பினால், சம்பந்தப்பட்ட அந்த நிலம் வாஸ்து குறைபாடுகளிலிருந்து விடுபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை சக்திகளும் வெளியேற வேண்டும். சில சமயம் நாம் செய்யும் தவறுகளால் வாஸ்து பிரச்னைகள் உண்டாகிறது. இதனால் எதிர்மறை ஆற்றல் ஏற்பட்டு, அது வீட்டில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அப்படி ஆரோக்கியமாக இருக்க சில விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த 8 வாஸ்து விதிகள் என்ன என பார்க்கலாம்.

கவனிக்க வேண்டிய வாஸ்து விதிகள்

  1. தூங்கும் திசை: வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒருவர் தெற்கு அல்லது கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்க வேண்டும். வடக்கு நோக்கி தலை வைத்து தூங்குவது இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் என சொல்லப்படுகிறது. இது பெரும்பாலும் தலைவலி, சோர்வு அல்லது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. எனவே தூங்கும் திசையை சரியாக வைத்திருப்பது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  2. படுக்கை அறை: எந்த காலத்தில் படுக்கைக்கு அடிப்பக்கத்தில் குப்பை அல்லது கனமான பொருட்களை வைக்க வேண்டாம் வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கைக்கு அடியில் உள்ள இடம் காலியாக இருக்க வேண்டும். நம்மில் பலருக்கும் பழைய துணிகள், காலணிகள், ஆவணங்கள் அல்லது குப்பைகளை படுக்கைக்கு அடியில் வைக்கும் பழக்கம் இருக்கலாம். இது எதிர்மறை சக்தியை உருவாக்கும் என சொல்லப்படுகிறது. இது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது மன அழுத்தம், சோர்வு மற்றும் தூக்கமின்மையையும் ஏற்படுத்துகிறது.
  3. கழிப்பறை: வீட்டின் அடிப்படை தேவையான கழிப்பறை இருப்பிடத்தில் கவனம் செலுத்துங்கள். சாஸ்திரப்படி வடகிழக்கு திசையில் அது இருந்தால், பெரிய வாஸ்து குறைபாடாகக் கருதப்படுகிறது. இது மன அழுத்தம், நோய்களை அதிகரிக்கிறது. எனவே இதனை சரியான திசையில் அமைக்க வேண்டும்.
  4. கண்ணாடி: படுக்கையறையில் எக்காரணம் கொண்டும் கண்ணாடி வைக்க வேண்டாம். தூங்கும் போது கண்ணாடி ஒருவரின் உடலைப் பிரதிபலித்தால, அது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். படுக்கையறையில் அப்படியான ஒரு தடையை வைக்க வேண்டாம். படுக்கையறையில் ஒரு கண்ணாடி இருந்தால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதை ஒரு துணியால் மூடவும்.
  5. சமையலறை: எந்த சூழலிலும் சமையலறையும் குளியலறையும் ஒன்றையொன்று நோக்கி இருக்கக்கூடாது சமையலறையும் குளியலறையும் ஒன்றையொன்று நோக்கி இருந்தால், அது நெருப்பு மற்றும் நீர் கூறுகளின் மோதலைக் குறிக்கிறது. இது குடும்ப உறுப்பினர்களிடையே நோய் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில், சமையலறை கதவில் சிவப்பு திரைச்சீலை தொங்கவிடுவது மங்களகரமானது.
  6. வீட்டிற்குள் சூரிய ஒளி: வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலையில் சூரிய ஒளி வீட்டிற்குள் நுழைய வேண்டும். இது நேர்மறை ஆற்றலைப் பரப்புகிறது. இது நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அதிகரிக்கிறது. சூரிய ஒளி எலும்புகளுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் டி யையும் வழங்குகிறது.
  7. வடகிழக்கு திசை: வீட்டின் வடகிழக்கு மூலை கடவுளின் இடமாகக் கருதப்படுகிறது. இங்கு தூசி அல்லது கனமான பொருட்களை வைத்திருப்பது மன அமைதியின்மை, சோர்வு மற்றும் நோய்களை அதிகரிக்கும். இந்த திசையை சுத்தமாகவும் வெளிச்சமாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், பூஜை அறையை அமைப்பதும் நல்லது.
  8. தண்ணீர் தொட்டி: வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி அல்லது ஆழ்துளை கிணறு வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். நீர் ஆதாரங்களை தவறான திசையில் வைப்பது மன அழுத்தம் மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கும். இது நடந்தால், நீங்கள் வாஸ்து தோஷ பரிகாரம் செய்ய வேண்டும்.

(வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)