Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாழ்க்கையில் இந்த 3 விஷயங்கள் மோசமான விளைவுகளை தரும்.. கவனமா இருங்க!

சாணக்கிய நிதி, வெற்றிக்குத் தடையான மூன்று பழக்கங்களை விளக்குகிறது. அதன்படி சுயபுகழ்ச்சி, மற்றவர்களை விமர்சித்தல், மற்றும் பிரதோஷ வேளையில் தவறான செயல்களில் ஈடுபடுதல் போன்றவையாகும். இவற்றைத் தவிர்ப்பதன் மூலம், வாழ்க்கையில் நிலைத்திருக்கலாம் என சாணக்கியர் கூறுகிறார். இதனை நாம் பின்பற்றினால் வெற்றி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வாழ்க்கையில் இந்த 3 விஷயங்கள் மோசமான விளைவுகளை தரும்.. கவனமா இருங்க!
சாணக்ய நீதி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 28 Jul 2025 11:28 AM

நம் அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் நாம் சில விஷயங்கள் தோல்வி, பின்னடைவை சந்திக்கும்போது உடைந்துப் போகிறோமே தவிர, அதனை பெற்றதில் எங்கு தவறு செய்தோம் என ஆராய மறுக்கிறோம். இந்த நேரத்தில் தான் அனுபவசாலிகள் சொல்லும் விஷயங்கள் நம்மை வெற்றியாளராக மாற்றும். அந்த வகையில் மிகப்பெரிய ஞானியாக அறியப்படும் ஆச்சார்ய சாணக்கியர் எழுதிய சாணக்ய நிதி புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றினால், வாழ்க்கையில் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று நம்பப்படுகிறது. இன்றும் கூட, புத்தகத்தின் உள்ளடக்கங்கள் இளைஞர்களுக்குப் பொருந்தும் என்று கூறப்படுகிறது. அப்படியான சாணக்கியரின் நெறிமுறைகளின்படி, சில விஷயங்களைச் செய்வது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மூன்று பழக்கங்களும் வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இவை மூன்றும் இன்றைய காலத்திற்கும் சமமாகப் பொருத்தமானவை. அதனைப் பற்றிக் காணலாம்.

புகழ்ந்து கொள்வது

சிலருக்கு தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பழக்கம் இருக்கும். இதுதான் ஈகோவை நோக்கிய முதல் படியாகும். தன்னைத்தானே புகழ்ந்து கொள்பவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். சுயபுகழ்ச்சி  ஒருவரை மோசமாகப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவருடைய ஆளுமையையும் பலவீனப்படுத்துகிறது. ஒருவர் தன்னைத்தானே திரும்பத் திரும்பப் புகழ்ந்து கொள்ளும்போது.. அவரது பெருமை வளரத் தொடங்குகிறது. பின்னர் அவர் தனது தவறுகளைப் புறக்கணிக்கத் தொடங்குகிறார். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு சிறந்த நபர் மற்றவர்கள் முன் தன்னைப் புகழ்ந்து கொள்ள மாட்டார். மற்றவர்களால் சிறந்தவர் என்று அழைக்கப்பட்டால் மட்டுமே நாம் சிறப்பானவர்கள் என்பதை உணர வேண்டும்.

இதையும் படிங்க: மகள் விவகாரம்.. தந்தை செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?

மற்றவர்களை விமர்சிப்பது

மற்றவர்களை விமர்சிப்பது அல்லது அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவது எதிர்மறையான மனநிலையைக் குறிக்கிறது. மற்றவர்களைப் பற்றி அவர்களின் முதுகுக்குப் பின்னால் மோசமாகப் பேசுவதன் மூலம், அந்த நபர் தனது மதிப்புகளையும் ஆளுமையையும் இழக்கிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். இந்த குணம் சமூகத்தில் உங்கள் நற்பெயரைக் கெடுத்துவிடும். மற்றவர்களிடம் தவறுகளை மட்டுமே பார்க்கும் ஒருவரால் ஒருபோதும் தன்னை வளர்த்துக் கொள்ள முடியாது. எனவே, அனைவரையும் விமர்சிப்பதற்குப் பதிலாக, உங்கள் தவறுகளை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Lakshmi Devi: லட்சுமி தேவி ஆசீர்வாதம் வேண்டுமா? – இரவில் இதெல்லாம் செய்யுங்க!

பிரதோஷ தரிசனம்

பிரதோஷ நேரத்தின் போது, அதாவது மாலை வேளையில், ஒருவர் கெட்ட எண்ணங்கள், தவறான சகவாசம் அல்லது தூய்மையற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பிரதோஷ தரிசனம் ஒருவரின் சக்தியை எதிர்மறையாக மாற்றும் என்று சாணக்கியர் நம்புகிறார். இது சுயபரிசோதனை, தியானம் அல்லது கடவுளை வழிபடுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரமாகும். இந்த நேரத்தில் ஒருவர் தவறான எண்ணங்கள் அல்லது செயல்களில் ஈடுபட்டால் அவரது மன மற்றும் ஆன்மீக சமநிலை மோசமடைகிறது என நம்பப்படுகிறது.

(சாணக்ய நிதி அடிப்படையிலான தகவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)