Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்ககிட்ட இந்த குணங்கள் இருந்தா போதும்.. கவலையே இருக்காது!

Chanakya Niti: சாணக்கியரின் சாணக்கிய நிதியில், அனைவராலும் விரும்பப்படும் நபராக மாறுவதற்கான ஐந்து முக்கிய குணங்கள் விளக்கப்பட்டுள்ளன. இனிமையான பேச்சு, தலைமைத்துவம், நேர்மை, பணிவு மற்றும் இரக்கம் ஆகியவை அடங்கும். இந்த குணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம், நல்ல உறவுகளைப் பேணுவதோடு, சமூகத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

உங்ககிட்ட இந்த குணங்கள் இருந்தா போதும்.. கவலையே இருக்காது!
சாணக்ய நிதி அறிவுரைகள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 15 Jul 2025 13:08 PM

இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் வெவ்வேறு வகையான பண்புகளை கொண்டிருக்கின்றனர். இவ்வளவு ஏன் நம்மைச் சுற்றியுள்ள சிலரைப் பார்த்தவுடன் முன்பின் தெரியாதவர்கள் என்றாலும் கூட நமக்கு அவர்களைப் பிடிக்கும். காரணம் அவர்களின் வார்த்தைகளும் செயல்களும் நம்மை அறியாமல் அவர்களைப் பிடிக்க வைக்கின்றது. ஆனால் லாஜிக்காக பார்த்தாலும் எல்லோராலும் விரும்பப்படும் நபராக இருப்பது ஒருவர் இருக்க சாத்தியமே இல்லை. கண்டிப்பாக நம் நல்லவராக ஒருவருக்கு தெரிந்தால் யாரோ ஒருவருக்கு கெட்டவராகவும் தெரிவோம். அப்படி நல்லவராக நம்மை வெளிப்படுத்துவது என்பது ஒரு கலையாகும். அதனைப் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்ய நிதியில் கூறியுள்ளார். அதில் நமது நடத்தை குணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கியுள்ளார். அதனைப் பற்றி நாம் காணலாம்.

நம்மிடம் இருக்க வேண்டிய குணங்கள்

இனிமையாகப் பேசுவது: நம் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் முதல் நம்முடைய செயல் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக தகவல் தொடர்பு சாதனமாக அறியப்படும் வாய் வார்த்தைகள் சரியாக இருந்தால் எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று நம் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். இதன் பொருள் நமக்கு ஒரு நல்லது நடந்தாலும் சரி, நமக்குத் தீமை நடந்தாலும் சரி, அவை நாம் பேசும் வார்த்தைகள் மூலமாகவே நடக்கிறது என்பதாகும். நாம் உட்பட அனைவரும் இனிமையாகவும் மென்மையான வார்த்தைகளையும் கேட்க விரும்புகிறோம். அப்படி அனைவராலும் விரும்பப்படும் நபராக மாறுவதற்கு அர்த்தமுள்ள உரையாடல் மிகவும் முக்கியமாகும் என்று ஆச்சார்ய சாணக்கியர் தெரிவித்துள்ளார். தெளிவான வார்த்தைகள் தவறான புரிதல்களைத் தடுக்கின்றன. பிறர் மனம் காயம்படுவதும் தடுக்கப்படுகிறது.

Also Read:Chanakya Niti: வாழ்க்கையில் இந்த 5 பேருக்கு கடன் கொடுக்காதீர்கள்.. சிக்கல் உண்டாகும்!

தலைமை குணங்கள்: நாம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பது முக்கியமானதாகும். வாழ்க்கையில் வகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதன் மூலம் அனைவரும் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க முடியும். இதைச் செய்வதன் மூலம், அனைவரின் மரியாதையையும் நம்பிக்கையையும் எவராலும் பெற முடியும். எனவே, தலைமை குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் அனைவருக்கும் நெருக்கமானவர்களாக மாறி விடுவீர்கள்.

நேர்மை: இன்றைய காலகட்டத்தில் நேர்மையானவர்களைக் கண்டுபிடிப்பது கடினமாகும். நூறு பேரில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே நேர்மையானவர்களாக இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் நேர்மை என்பது எந்த உறவிற்கும் அடித்தளம் என்பதை உணர வேண்டும். எனவே, அனைவரும் எப்போதும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இது உறவில் நம்பிக்கையை வளர்க்க உதவும்.

Also Read:Chanakya Niti: வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!

பணிவு: அனைவருக்கும் இருக்க வேண்டிய முதல் குணம் பணிவு என்று ஆச்சார்ய சாணக்கியர் தெரிவித்துள்ளார். காரணம் பணிவானவர்கள் எல்லோருடனும் விரைவாகப் பழகக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்கள். தங்களைச் சுற்றியுள்ள மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் இயல்பாகவே அனைவருக்கும் பிடித்தமானவர்களாக திகழ்வார்கள்.

இரக்கம்: பணிவுக்குப் பின் நீங்கள் எல்லோராலும் விரும்பப்பட வேண்டுமென்றால், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும். தங்கள் பிரச்சினைகளையும் கவலைகளையும் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் மட்டுமே அனைவருடனும் நெருக்கமாக இருக்க முடியும். ஒருவர் சிக்கலில் இருக்கும்போது அவருக்கு உதவுவதன் மூலமும், ஆதரவளிப்பதன் மூலமும் உறவுகள் பலப்படும்.அப்படிப்பட்டவர்களை அனைவரும் விரும்புவார்கள் என சொல்லப்படுகிறது.

(சாணக்ய நிதி அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)