Chanakya Niti: வாழ்க்கையில் இந்த 5 பேரை எப்போதும் நம்பாதீர்கள்!
சாணக்கிய நீதி, வாழ்க்கையில் வெற்றி பெறவும், நல்ல உறவுகளைப் பேணவும் முக்கியமான வழிகாட்டியாக உள்ளது. சாணக்கியர், பொய் சொல்பவர்கள், வாக்களிப்பை மீறுபவர்கள், சுயநலவாதிகள் மற்றும் பொறாமைப்படுபவர்கள் ஆகியோருடன் நட்பு கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். இந்த நபர்களுக்கு சொந்த நலன் மட்டுமே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. இன்பம், துன்பம் இரண்டும் கலந்த வாழ்க்கை எப்போது கணிக்க முடியாத ஒன்றாகும்.அதனால் ஜோதிட சாஸ்திரங்களும், அறிஞர்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தால் சிறப்பாக இருக்கும் என சொல்லி வைத்திருக்கிறார். நம்மில் பெரும்பாலானோர்களுக்கு அவற்றின் மீது நம்பிக்கை இருக்கும். அப்படிப்பட்ட அறிஞர்களில் ஒருவர் தான் சாணக்கியர் (Chanakya). அவரால் எழுதப்பட்ட சாணக்கிய நீதி (Chanakya Niti) வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க நமக்கு உதவுகிறது. அப்படியாக வாழ்க்கையில் நாம் யாரெல்லாம் உடன் வைத்துக் கொள்ளக்கூடாது என சாணக்கியர் அறிவுறுத்தியிருக்கிறார். இவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளக்கூடாது என அவர் கூறுகிறார். அதனைப் பற்றி நாம் காணலாம்.
- பொய் சொல்பவர்கள்: வாழ்க்கையில் நாம் வளர்ச்சியை நோக்கி செல்வதற்கு உதவுகிறார்களோ இல்லையோ, நாம் இறக்கத்திற்கு செல்லும்போது அதனைக் கண்டு மன மகிழ்வோர் இருப்பார்கள் என நாம் பல நேரங்களில் உணர்ந்திருப்போம். நம்முடன் இருந்து நம் வாழ்வில் துன்பங்களை கண்டு ரசிப்பவர்களும் இருப்பார்கள். அப்படியாக பொய் சொல்பவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளக்கூடாது என சாணக்கியர் தெரிவித்துள்ளார். காரணம் பொய் சொல்லும் ஒருவருடனான எந்த உறவிலும் நிலைத்தன்மை என்பது இருக்காது. அத்தகைய நபர்கள் தங்கள் சொந்த நலனை மட்டுமே பார்ப்பார்கள். தான் தப்பிக்க வேண்டும் என்றால் எந்த பொய் வேண்டுமானாலும் சொல்வார்கள். அதேசமயம் நேரம் வரும்போது அவர்களால் உங்களையும் ஏமாற்றவும் முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
- வாக்கை மீறுபவர்கள்: யார் ஒருவர் நிலையான பேச்சு திறனை கொண்டிராதவர்களாக இருப்பார்களோ அவர்களுடன் நட்பு வைக்க வேண்டாம். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என சொல்வார்கள். அப்படியாக ஒரு வாக்குறுதியை கொடுத்து விட்டு நேரம் வரும்போது அதனை மீறி, செயல்படுபவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது என சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் மீண்டும் மீண்டும் சொன்ன சொல்லில் இருந்து பின்வாங்கும்போது, அவர்களின் நோக்கங்கள், நம்பிக்கைகள் கேள்விக்குறியாகிவிடும். அத்தகையவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எந்த உறவையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்கள். அவர்களின் சேர்க்கை எப்போதும் ஆபத்தானது எனவும் அவர்கள் மற்றவர்களுக்கு துரோகம் இழைக்க தயங்க மாட்டார்கள் எனவும் சாணக்கியர் தெரிவிக்கிறார்.
- சுயநலவாதிகள்: அதேசமயம் சுயநலவாதிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அத்தகையவர்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காத அவர்கள். தங்கள் சொந்த நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் காரியம் முடிந்ததும் மற்றவர்களை கைவிட்டு விடுவார்கள். இவர்கள் ஒருபோதும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இந்த உறவு அச்சுறுத்தலாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
- பொறாமைப்படுபவர்கள்: உங்கள் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் எப்போதும் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்திருக்கலாம். சாணக்கியரின் கூற்றுப்படி, அத்தகையவர்கள் ஒருபோதும் உங்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்க முடியாது. இவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். இதுபோன்றவர்களுடன் நட்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையைப் பலவீனப்படுத்தும். உங்கள் பாதையில் தடைகளை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் தோல்வியை மட்டுமே விரும்பி ஆனந்தம் காண்பார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.
(இந்த செய்தியானது சாணக்கியர் நீதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)