Lakshmi Devi: லட்சுமி தேவி ஆசீர்வாதம் வேண்டுமா? – இரவில் இதெல்லாம் செய்யுங்க!
சாணக்கிய நீதியின்படி, இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் வீட்டின் முன் வாசலை சுத்தம் செய்தல், பூஜை அறையில் உள்ள பூக்களை அகற்றி புதிய நீரை நிரப்புதல் மற்றும் விளக்கேற்றுதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் செல்வமும் செழிப்பும் பெருகும் எனக் கூறப்படுகிறது. இவை எதிர்மறை எண்ணங்களை விலக்கி லட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது.

பொதுவாக வாழ்க்கையில் சாஸ்திரங்களின் அறிவுறுத்தலின்படி சில விஷயங்களை நாம் செய்யலாம், செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது. அதேபோல் தத்துவ ஞானிகளும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என நமக்கு கற்பிக்கின்றனர். அந்த வகையில் மிகப்பெரிய தத்துவ ஞானியாக பார்க்கப்படும் ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்ய நீதியில் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் நாம் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த விதிகளைப் பின்பற்றினால் எதிர்மறை எண்ணங்கள் விலகி, லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சாணக்கிய நீதியில் ஆச்சார்ய சாணக்கியர் கூறியுள்ளார்.
வாஸ்து சாஸ்திரம்
பொதுவாக ஒரு வீடு, அலுவலகம் என எது எடுத்துக் கொண்டாலும் நாம் முதலில் அது வாஸ்து சாஸ்திரத்தின்படி இருக்கிறதா என பார்க்க வேண்டும். சில நேரங்களில் நம்மையும் மீறி செய்யும் சில தவறுகளால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றி விடும். இது அசுபமான நிகழ்வுகளையும், அறிகுறிகளையும் ஏற்படுத்தும். எதிர்மறை சக்திகளால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகளை நாம் சந்திக்கும் சூழல் உண்டாகலாம். அப்படியாக சாணக்கியர் கூறிய சில விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
வீட்டின் பிரதான நுழைவாயிலை சுத்தம் செய்வது
சாணக்கிய நிதியின்படி, உங்கள் வாழ்க்கையில் பணம் தொடர்பாகவோ அல்லது ஏதேனும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டால், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் வீட்டின் பிரதான நுழைவாயிலை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். இது தவிர, வீட்டின் வடக்குப் பகுதியையும் சரியாக சுத்தம் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என சொல்லப்படுகிறது.
மேலும் காலையில் வீட்டின் கதவைத் திறக்கும்போது அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். அதாவது முதலில் பின் கதவைத் திறக்கவும். அதன்பின் புனித நீராடி இறை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் தான் முன் கதவுகளைத் திறக்க வேண்டும். அதே நேரத்தில், வீட்டின் தூய்மையில் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
Also Read: தூங்கும்போது இப்படி செய்யாதீங்க.. பண பிரச்னை வரலாம்!
பூஜையறை பூக்களை அகற்றவும்
பொதுவாக இறை வழிபாட்டில் நாம் பூக்களை பயன்படுத்துவது வழக்கம். சிலர் காலை பூஜையில் பயன்படுத்தப்படும் பூக்களை அப்படியே அகற்றாமல் வைக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் காலை வழிபாட்டில் பூக்களை வைத்தால் அதனை கண்டிப்பாக இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் அகற்ற வேண்டும். மேலும், தெய்வத்தின் பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள கலசம் (தண்ணீர் பாத்திரம்) தூய நீரால் நிரப்பப்பட வேண்டும். இதைச் செய்வதன் மூலம், வாழ்க்கையில் ஒருபோதும் பணம் தொடர்பான பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க மாட்டீர்கள் என சொல்லப்படுகிறது.
இரவில் விளக்கேற்றுவது
உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறையான எண்ணங்களை நீக்க விரும்பினால், இரவில் விளக்கேற்றுவது ஒரு நல்ல தீர்வாகும். அந்த எரியும் விளக்கில் கிராம்புகளை வைக்கவும். இதைச் செய்வது உங்கள் வாழ்க்கையிலிருந்து மட்டுமல்ல, உங்கள் வீட்டிலிருந்தும் அனைத்து வகையான எதிர்மறை ஆற்றலையும் நீக்கும்.
Also Read: அக்னி காவடி எடுத்தால் தீராத நோயும் தீருமாம்.. இந்த கோயில் தெரியுமா?
(சாணக்ய நீதியில் சொல்லப்பட்டுள்ளதன் அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)