Vastu Tips: வீட்டில் இந்த போட்டோவெல்லாம் மாட்டாதீங்க.. அப்புறம் சிக்கல் தான்!
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் தொங்கவிடும் படங்கள் நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலைப் பரப்பும். போர்ப் படங்கள், தாஜ்மஹால், ஆக்ரோஷமான விலங்குகள், அழும் குழந்தை, மூழ்கும் கப்பல், முட்கள் கொண்ட செடிகள் (ரோஜா போன்றவை) ஆகியவற்றை நாம் வீட்டில் வைக்கக்கூடாது. எனவே நேர்மறை ஆற்றலைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என சொல்லப்படுகிறது.

வாஸ்து என்பது நம்முடைய வளர்ச்சி, மகிழ்ச்சி, செல்வ வளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சார்ந்ததாக உள்ளது. நிலம் சார்ந்த விஷயங்களை கொண்ட வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வீட்டை நாம் அழகுப்படுத்த பல்வேறு விஷயங்களை மேற்கொள்வோம். அந்த வகையில் வீட்டின் அழகை அதிகரிக்க பல்வேறு வகையான புகைப்படங்களை சுவர்களில் தொங்கவிடுவது வழக்கம். முன்னோர்கள் படம், குடும்ப உறுப்பினர்கள் படம், கடவுள்கள் மற்றும் இயற்கையின் படங்கள் என அவை எதுவாகவோ இருக்கலாம். இந்த புகைப்படங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறையை பரப்பும் சக்தியையும் கொண்டுள்ளன என நம்பப்படுகிறது. ஆனால் பலருக்கும் வீட்டில் எந்த புகைப்படங்களை வைக்க வேண்டும், வைக்கக்கூடாது என்பதில் குழப்பம் உள்ளது. இந்த கட்டுரையில் நாம் எந்த புகைப்படத்தை மாட்டக்கூடாது என்பது பற்றிக் காணலாம்.
இந்த போட்டோவெல்லாம் மாட்டாதீர்கள்
- போர் படங்கள்: ஆன்மிக ரீதியாக, தேச ரீதியாக போர் தொடர்பாகவோ அல்லது வேட்டை தொடர்பான படங்களையோ வீட்டில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. அவை எப்போதும் வீட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை வீட்டில் ஒரு முரண்பாடான சூழ்நிலையையும் உருவாக்கும் என சொல்லப்படுகிறது.
- தாஜ்மஹால் : சிலர் அன்பு மற்றும் காதலின் அடையாளமாக தாஜ்மஹாலின் புகைப்படத்தை வீட்டில் வைத்திருப்பார்கள். இருப்பினும், இந்த புகைப்படத்தை வீட்டில் வைக்கக்கூடாது. வாஸ்து படி பார்த்தால் அந்த இடம் மும்தாஜின் கல்லறையாக அறியப்படுகிறது. இத்தகைய கல்லறை தொடர்பான படத்தை வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை சக்தியை பரப்பும் என நம்பப்படுகிறது.
Also Read: இந்த திசையில் மீன் தொட்டியை வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்!
- ஆக்ரோஷமான விலங்குகள் : வலி, சோகம் மற்றும் கோப உணர்வுகளைக் காட்டும் விலங்குகளின் படங்களை வீட்டின் சுவர்களில் தொங்கவிடக்கூடாது. இவை எதிர்மறையை அதிகரிக்கும். எனவே, எப்போதும் மகிழ்ச்சியைக் குறிக்கும் படங்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
- அழும் குழந்தை: உங்கள் வீட்டின் சுவரில் அழும் குழந்தையின் புகைப்படத்தை ஒருபோதும் தொங்கவிடாதீர்கள். அவ்வாறு செய்வது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தால் கூட அப்படி செய்யக்கூடாது.
- மூழ்கும் கப்பல்: சிலர் தங்கள் வீட்டின் சுவரில் மூழ்கும் கப்பலின் படத்தைத் தொங்கவிடுவார்கள். இருப்பினும், இதுபோன்ற படங்கள் வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரித்து அமைதியின்மையை உண்டாக்கும். இது வீட்டின் நிதி நிலைமையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது
Also Read: வீட்டில் சிவப்பு நிற பூச்செடி இருக்கா? – உடனே இதைப் பண்ணுங்க!




- ரோஜா செடி : சிலருக்கு ரோஜா செடிகள் பிடிக்கும். அதனால்தான் அவர்கள் தங்கள் வீட்டின் சுவரில் ரோஜா செடிகளின் புகைப்படத்தையும் தொங்கவிடுகிறார்கள். இருப்பினும், முட்கள் கொண்ட இந்த செடிகளின் புகைப்படம் வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது என சொல்லப்படுகிறது. இது நிதி இழப்புக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
- நீர்வீழ்ச்சி படம்: சிலர் தங்கள் வீட்டின் சுவரில் நீர்வீழ்ச்சிகளின் படங்களைத் தொங்கவிடுவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்தப் படங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. ஏனெனில் அது நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். தண்ணீர் பாய்வது போல இருப்பது, வீட்டிலிருந்து செல்வ வளத்தை வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. டிவி9 தமிழ் இதற்கு பொறுப்பேற்காது)