AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்சி மாணவி பொய் புகார்? சிசிடிவி அடிப்படையில் காவல்துறை தரப்பில் தகவல் – என்ன நடந்தது?

சென்னை அபிராமபுரம் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் பதிவுசெய்யப்பட்ட விவகாரத்தில் திருச்சி மாணவி பொய் புகார் அளித்துள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவம் நடைபெறாதது தெரியவந்தது எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்பு மற்றும் பிற விஷயங்களில் மன உளைச்சலில் இருந்ததால் அந்த பெண் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாணவி பொய் புகார்? சிசிடிவி அடிப்படையில் காவல்துறை தரப்பில் தகவல் – என்ன நடந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Mar 2026 18:59 PM IST

சென்னை, மார்ச் 12 : சென்னை அபிராமபுரம் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் பதிவுசெய்யப்பட்ட விவகாரத்தில் திருச்சி மாணவி பொய் புகார் அளித்துள்ளதாகவும், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவம் நடைபெறாதது தெரியவந்தது எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிப்பு மற்றும் பிற விஷயங்களில் மன உளைச்சலில் இருந்ததால் அந்த பெண் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் புகார் குறித்து காவல்துறை பரபரப்பு தகவல்

திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த பிப்ரவரி 14, 2026 அன்று கல்லூரி புராஜெக்ட் விஷயமாக சென்னைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது புகைப்படத்தை தவறாக சித்தரித்து கல்லூரி குழுவில் அனுப்பியதாகவும், இதனை பார்த்த மாணவி அதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 9, 2026 அன்று தான் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியே செல்வதற்காக புறப்பட்ட அவரை காரில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக கறப்படுகிறது. அந்த பெண்ணை காரில் வைத்து வன்கொடுமை செய்துவிட்டு இறக்கிவிடப்பட்டு தப்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு கனவிலும் நினைத்திடாத தண்டனை.. நெல்லை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த நிலையில் அந்தப் பெண் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மார்ச் 10, 2026 அன்று சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வெளியே வந்த மாணவியை மீண்டும் அந்த மர்ம கும்பல் காரில் கடத்தி சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த மாணவி தனது ஆண் நண்பரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதன் பின்னர் அந்த மாணவியும் ஆண் நண்பரும் அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், சென்னையில் மாணவி ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : காட்டுக்குள் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. 6 தனிப்படைகள் அமைப்பு!

இந்த நிலையில் திருச்சி மாணவி அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் அந்த சம்பவம் நடைபெறவில்லை என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவி படிப்பு மற்றும் இதர விஷயங்களால் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதனால் அந்த பெண் புகார் அளித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us