Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: வாஸ்து டிப்ஸ்.. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் நிதி பிரச்னைகள் நீங்குமாம்!

வீட்டில் செம்பருத்தி செடி வளர்ப்பதால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, நிதி நெருக்கடிகளைக் குறைக்கவும், குடும்ப அமைதியைப் பேணவும் இது உதவும். வெள்ளிக்கிழமைகளில் விநாயகர், துர்க்கை வழிபாட்டில் செம்பருத்தி பூக்களைப் பயன்படுத்தலாம் எனவும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Vastu Tips: வாஸ்து டிப்ஸ்.. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் நிதி பிரச்னைகள் நீங்குமாம்!
வாஸ்து டிப்ஸ்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 13 Jun 2025 11:38 AM IST

ஆன்மிகம் (Spiritual) என்பது இந்த உலகில் அனைத்து உயிரினங்களிடத்திலும் நிறைந்துள்ளது. அதனால் தான் தாவரங்கள் தொடங்கி விலங்குகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பூக்களை எடுத்துக் கொண்டால் இறை வழிபாட்டில் அதற்கு மிக முக்கியத்தும் அளிக்கப்படுகிறது. இதிலும் சில பூக்கள் குறிப்பிட்ட சில கடவுள்களுக்கு உகந்தது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் செம்பருத்தி பூக்கள் (Hibiscus Flower) இயற்கையாகவே அழகு நிறைந்தவை.  மிகுந்த மருத்துவக்குணம் நிறைந்த செம்பருத்தி அதிகமாக கிராமப்புறங்களில் வளர்க்கப்படுகிறது. இதனை தோட்டத்தில் வைப்பதால் ஆன்மிக ரீதியாக பல நன்மைகள் உண்டாவதாக சொல்லப்படுகிறது. வீட்டில் செம்பருத்தி செடி வைப்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்

செம்பருத்தி பூச்செடியை வீட்டில் வளர்ப்பதால் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதனை வீட்டில் வைக்கும்போது சரியாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். செடி வறண்டு போகாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கவனமாக வளர்க்க வேண்டும். செல்வத்தின் அதிபதியான லட்சுமிக்கு பிரியமான செம்பருத்தி வாஸ்து சாஸ்திரத்தில் மிகப்பெரிய நிதி பங்களிப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்பருத்தி செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இந்த செம்பருத்தி செடியை வீட்டில் வளர்த்தால்,  நிதி நெருக்கடியில் இருப்பவர்கள், கடனில் சிக்கி தவிப்பவர்கள் பிரச்னைகள் பெருமளவு குறையும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் பணம் வைக்கப்படும் இடத்தில், குறிப்பாக ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமை நாளில் செம்பருத்தி பூக்களை வைத்து, விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்தா, மிகப்பெரிய  பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வழிபாட்டை முடிந்தால் வாரத்தின்  7 நாட்கள் செய்தால், விரைவில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும்பணப் பிரச்சினைகள் நீங்கும் என்று ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

குடும்ப உறவுகளில் மோதல்கள் மற்றும் பதட்டங்கள் இருப்பது சில நேரங்களில் வாஸ்து குறைபாட்டாலும் நடக்கலாம். அப்படியான நிலையில் ​​செம்பருத்தி பூவை உங்கள் தலையணைக்கு அடியில் தூங்கும்போது வைத்து கொள்ளலாம். இது மனதை அமைதிப்படுத்தி, நீங்கள் இருக்கும் இடத்தில் பாசிட்டிவ் உணர்வுகளை உண்டாக்கி உறவுகளிடையே அன்பை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் வீட்டில் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என விரும்புபவர்கள் இரவில் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரில் கலந்து செம்பருத்தி பூக்களை வைத்து, சூரிய உதயத்தில் சூரியனை வணங்கி, வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தெளிக்கலாம். இது ஐஸ்வர்யத்தை அதிகரிப்பதோடு, தீய சக்திகளை அகற்றும் என நம்பப்படுகிறது.

செம்பருத்தி செடி நம் வீட்டிற்கு பசுமை, அழகு மற்றும் நல்ல சூழ்நிலையை கொண்டு வருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த செடியை வீட்டில் வளர்க்கலாம்.

(ஆன்மிக மற்றும் வாஸ்து நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)