AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இஸ்லாமிய சிறுவனும்.. டி.எம்.சௌந்தர்ராஜனும்.. உள்ளம் உருகுதய்யா பாடல் உருவான கதை!

Ullam Uruguthaiyya Song: டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பிரபல பக்திப் பாடல் "உள்ளம் உருகுதய்யா" பற்றிய சுவாரஸ்யமான பின்னணி பற்றிப் பார்க்கலாம். பழனியில் ஒரு இஸ்லாமிய சிறுவனிடம் இருந்து இந்தப் பாடல் வரிகள் கிடைத்தது என அவர் பலமுறை தெரிவித்திருக்கிறார். காஞ்சி காளிகாம்பாள் கோவிலில் கல்வெட்டில் இந்த வரிகள் இருந்ததை டி.எம்.எஸ் கண்டு அதிசயித்தும் போனார்.

இஸ்லாமிய சிறுவனும்.. டி.எம்.சௌந்தர்ராஜனும்.. உள்ளம் உருகுதய்யா பாடல் உருவான கதை!
டி.எம். சௌந்தரராஜன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Jun 2025 13:23 PM IST

தமிழ் கடவுள் என கொண்டாடப்படும் முருகனுக்கு  (Lord Murugan) தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது என்பது நம் அனைவரும் அறிந்தது. அது மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் அளித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை வாய்ந்த முருகப்பெருமானுக்கு வழிபாடு நடத்துவது என்பது இந்து மதத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கந்தன், கடம்பன், முருகன், கார்த்திகேயன், தண்டாயுதபாணி, பாலசுப்பிரமணியன் என பல்வேறு பெயர்களை தாங்கி நிற்கும் முருகன் நம்முடைய கவலைகளை எல்லாம் போக்கி மகிழ்ச்சியை தருவான் என்பது பக்தர்களின் எல்லையில்லாத நம்பிக்கையாக உள்ளது. இப்படியான முருகனுக்கு திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் மற்றும் பக்தி பாடல்கள் ஏராளமானவை உள்ளது.

உள்ளம் உருகுதய்யா பாடல்

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், “உள்ளம் உருகுதய்யா.. உன்னடி காண்கையிலே” என்ற பாடல் கேட்கும்போதே நம் மனதிற்குள் முருகன் குடி புகுந்து நம்மை ஆட்கொண்டு விடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இந்தப் பாடலை மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகர் ஆன டி.எம்.சௌந்தரராஜன் (T.M.Soundararajan) பாடியிருப்பார். அவரது குரலில் இந்தப் பாடலை கேட்போருக்கு முருகப்பெருமானை எந்த அளவுக்கு பிடிக்கும் என வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தப் பாடல் உருவானதற்கு பின்னால் மிகப்பெரிய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உள்ளது.

பழனியில் கிடைத்த பொக்கிஷம்


அதாவது மிகப்பெரிய முருக பக்தரான டி.எம்.சௌந்தரராஜன் ஒவ்வொரு மாதமும் பழனிக்கு சென்று தண்டாயுதபாணியை வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. அப்படியாக ஒருமுறை அவர் செல்லும் போது அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்தார். அங்கு பணியாற்றி வந்த ஒரு இஸ்லாமிய சிறுவன் ஒருவன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அந்தப் பாடல் வித்யாசமாக இருக்கவே டி.எம்.சௌந்தரராஜன் என்ன பாடுகிறான் என உற்று நோக்கினார்.

அப்போது, “உள்ளம் உருகுதடா முருகா உன்னடி காண்கையிலே” என தொடர்ந்து சில வரிகள் பாட அது டி.எம்.சௌந்தரராஜனை மிகவும் கவர்ந்து விட்டது. அந்த சிறுவனிடம் இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது, யார் எழுதியது? என கேட்டுள்ளார். அது எனக்கு தெரியாது, பிடித்ததால் பாடுகிறேன் என அந்த இஸ்லாமிய சிறுவனும் கூறியிருக்கிறான். அதன் பிறகு அந்த சிறுவனிடம் பாடலின் வரிகளை கேட்டு டி.எம்.எஸ் எழுதிக் கொள்கிறார்.

பின்னர் சென்னை திரும்பிய அவர் அந்த சிறுவன் சொன்ன வரிகளில் டா என இருந்த இடத்தில் அய்யா என மாற்றி “உள்ளம் உருகுதைய்யா முருகா.. உன்னடி காண்கையிலே” என பதிவு செய்துள்ளார். இந்தப் பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பக்தர்களை கவர்ந்தது.

பாடலை எழுதியவர் இவர் தான்!

இதன்பிறகு சென்னை தம்பு செட்டி தெருவில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலுக்கு டி.எம்.சௌந்தரராஜன் ஒருமுறை சென்று இருக்கிறார். அப்போது பிரகாரம் சுற்றி வரும்போது ஒரு கல்வெட்டில் உள்ளம் உருகுதடா உன்னடி காண்கையிலே என்ற பாடல் வரிகளை கண்டு அதிசயித்துள்ளார். அதற்கு கீழ் ஆண்டவன் பிச்சி என்ற பெயர் இருந்துள்ளது. ஆம் உண்மையில் அந்த பாடலை எழுதியவர் ஒரு பெண்மணி ஆவார். அவரின் உண்மையான பெயர் மரகதவல்லி ஆகும்.

காஞ்சி மகா பெரியவர் தான் அந்த பெயரை மாற்றி ஆண்டவன் பிச்சி என அழைத்தார். தனது பத்து வயதில் இருந்து முருக பக்தையாக இருந்து பக்தி பாடல்களை பாடி வந்த ஆண்டவன் பிச்சி ஒன்பது குழந்தைகளுக்கு தாயாவார். ஆனால் பிற்காலத்தில் துறவரம் பூண்டு முருக பக்தையாக மாறி இது போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார் என ஆன்மிக அன்பர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us