Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Spiritual: ஞாயிற்றுக்கிழமையில் இந்த விஷயத்தை தயவு செய்து செய்யாதீங்க!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித நாளாகும். இந்நாளில் கருப்பு ஆடை அணிவது, அவமரியாதை பேசுவது உள்ளிட்ட சில விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் விரதம் இருந்து, கிழக்கு நோக்கி சூரியனை வழிபட்டு, வெல்லம், குங்குமம், சிவப்புப் பூக்கள், அக்ஷதை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். இதன் மூலம் சூரிய பகவானின் ஆசியையும், வாழ்க்கையில் வளர்ச்சியையும் பெறலாம்.

Spiritual: ஞாயிற்றுக்கிழமையில் இந்த விஷயத்தை தயவு செய்து செய்யாதீங்க!
சூரிய பகவான் வழிபாடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 Jun 2025 08:53 AM IST

இந்து மதத்தில் ஏராளமான தெய்வங்கள் வழிபாட்டு கடவுள்களாக வணங்கப்பட்டு வருகிறது. அனைத்து தெய்வங்களுக்கும் தனி கோயில்கள் அல்லது தனி சன்னதியானது உள்ளது. அதேபோல் வாரத்தின் 7 நாட்களுக்கும் சாஸ்திரத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை என்பது சாஸ்திரத்தைப் பொறுத்தவரை புனிதமான நாளாகும். இந்த நாள் வாழும் கடவுளான சூரியநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இந்நாளில் நாம் பூஜை வழிபாடு செய்யும் போது சில விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் சூரிய பகவானின் ஆசிகளைப் பெறலாம் என சொல்லப்படுகிறது.அதேசமயம் இதே ஞாயிற்றுக்கிழமை நாளில் நாம் தவறுதலாக கூட சில விஷயங்களைச் செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.

என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

சூரிய பகவானுக்கு என அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளில் கருப்பு நிற ஆடைகளை அணியவே  கூடாது. பலரும் வெளி இடங்களுக்கு செல்லும்போது கருப்பு நிற ஆடைகளை தேர்வு செய்கிறார். அதனை செய்யக்கூடாது. மேலும் இந்த நாளில், தவறுதலாக கூட யாரையும் அவமரியாதையாகவோ, கஷ்டப்படுத்தும் வார்த்தைகளை கூறியோ வாக்குவாதம் செய்யக்கூடாது. குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து வகையான பெண் உறவுகளிடம் உரிமை என்ற பெயரில் அவமரியாதை செய்யவே கூடாது. இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில்  தவறுதலாகக் கூட உங்கள் தந்தையை அவமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாளில் முடிந்தவரை உப்பு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு அல்லது கோயிலில் இருக்கும் துளசி செடியைத் தொடவோ அல்லது தண்ணீர் ஊற்றவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையெல்லாம் கண்டிப்பாக செய்யலாம்

சூரிய பகவான் 9 கிரகங்களுக்கும் அதிபதியாவார். இந்நாளில் அவருக்கு விரதமிருந்து வழிபட்டால் வாழ்க்கையில் கல்வி, தொழில், இல்வாழ்க்கை உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறலாம் என நம்பப்படுகிறது. அதேசமயம் எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் நம்மை சூழ்ந்து இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். வாய்ப்பு கிடைப்பவர்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி நேரடியாக கிழக்கு திசை நோக்கி நின்று சூரிய பகவானை வழிபடலாம்.

பூஜை வழிபாட்டில் நைவேத்தியமாக வெல்லம் படைக்கலாம். மேலும் குங்குமம், சிவப்பு நிறத்திலான பூக்கள் மற்றும் அக்ஷதங்களை தண்ணீரில் போட்டு சூரிய கடவுளுக்கு அர்ச்சனை செய்யலாம். வழிபாட்டின்போது சூரிய கடவுள் தொடர்பான வேத மந்திரங்களை உச்சரிக்கவும். பின்னர் சடங்கு நடைமுறைகளின்படி ஆரத்தி எடுக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், சூரிய பகவான் மகிழ்ச்சியடைவார் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் மகத்தான புகழையும் கௌரவத்தையும் பெறுவீர்கள் என்பது ஐதீகமாக உள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)