Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமா? – இந்த 2 விஷயம் செய்யாதீங்க!

சுய சிந்தனை மற்றும் உறுதியான முடிவெடுப்பதன் மூலம் மட்டுமே வெற்றியை அடைய முடியும். மற்றவர்களின் கருத்துகளை மதித்து, ஆனால் சொந்த முடிவை எடுப்பது மிகவும் முக்கியம். நேரத்தை வீணாக்காமல், இலக்குகளில் கவனம் செலுத்துவதே வெற்றியின் சூத்திரம் என சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமா? – இந்த 2 விஷயம் செய்யாதீங்க!
சாணக்ய நீதி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Jun 2025 14:06 PM

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியாக அமையாமல் வெவ்வேறு நிகழ்வுகளை கொண்டதாக இருக்கும். மனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கையில் என்னென்ன செயல்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதையெல்லாம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி, ஒழுக்கம், வாழ்க்கை நெறி, நேர்மை, பெரியவர்களை மதித்தல் போன்ற விஷயங்களை கடைபிடித்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறலாம் என சொல்லப்படுகிறது. அத்தகைய அறிவுரைகளை வழங்குபவர்களில் ஒருவரான ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையில், ஒவ்வொரு விஷயத்தில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும், எந்த பழக்கங்களை கைவிட வேண்டும் என்பது பற்றி தெரிவித்துள்ளார். அந்த வகையில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்க நாம் 2 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

என்னென்னெ பழக்கங்கள் தெரியுமா?

எல்லோரையும் திருப்திப்படுத்த முயற்சிப்பது

வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை ஒரே சமயத்தில் சாத்தியப்படுத்தவே முடியாது. அப்படியான ஒன்று தான் அனைவரையும் திருப்திபடுத்த முயற்சிப்பது. இந்த விஷயத்தில் முயற்சிப்பவர்கள் ஒருபோதும் தனது இலக்கை நோக்கி பயணப்படவும் மாட்டார், அடையவும் மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் நேரத்தை அதிகமாக வீணாக்குவார்கள். அத்தகையவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து சுயமாக சிந்திக்காமல் அந்தக் கருத்துகளில் உள்ள சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்வார்கள்.. இதன் காரணமாக, அவர்கள் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் வாய்ப்பை இழக்கிறார்கள்.

அனைவரையும் மதிப்பது நல்ல விஷயம்.அவர்கள் சொல்வதையும், விருப்பங்களையும் மனதில் வைத்திருப்பது மிகவும் புத்திசாலித்தனம் தான். ஆனால் முடிவு என்பது சுயமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தால் உங்களின் தன்னம்பிக்கை பலவீனப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மற்றவர்களை மகிழ்விக்க களமிறங்குவதன் மூலம் உங்களின் சுய பிம்பத்தை இழக்கும் சூழல் உண்டாகலாம்.

இருப்பினும், உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்கள் வாழ விரும்பினால், மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு எப்போதும் எது சரியெனப் படுகிறதோ அல்லது தேவையானது என தோன்றுகிறதோ அதனைச் செய்யுங்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார். வெற்றியை அடைய தெளிவான சிந்தனையும் மனஉறுதியும் அவசியம் என்பதை மறக்காதீர்கள்.

தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல்

ஒரு விஷயத்தில் மற்றவர்களின் விமர்சனங்களைக் கேட்பது தவறில்லை. ஆனால் அதுதான் சரி என உங்கள் மனதில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் வெற்றியை பலவீனப்படுத்தும் செயலாகும். மக்கள் அனைவருக்கும் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால், விமர்சனங்களை கண்டு சரியென, தவறென பிரித்து பார்த்து தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துபவர்கள் மட்டுமே சிறந்த மனிதர்களாக மாறுகிறார்கள். காரணமின்றி விமர்சிப்பவர்களுக்குப் பதிலளித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்கள் நேரத்தையும் சக்தியையும் உங்கள் வேலை மற்றும் இலக்குகளில் மட்டுமே செலுத்துங்கள்.  நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், தேவையற்ற விஷயங்கள் மற்றும் விமர்சனங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்பதை உணருங்கள்.

(சாணக்கியர் அருளிய சாணக்கிய நீதி புத்தகம் அடிப்படையில் இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)