AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகா சிவராத்திரி 2026.. உங்கள் பண கஷ்டம் தீர இந்த நேரம் கண்விழித்தால் போதும்..

Maha Shivaratri 2026: இந்த ஆண்டு மகா சிவராத்திரி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் வருகிறது. சதுர்த்தசி திதி பிப்ரவரி 15 மாலை தொடங்கி, பிப்ரவரி 16 மாலை வரை நீடிக்கிறது. அதனால் பிப்ரவரி 15 இரவு முழுவதும் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Feb 2026 14:42 PM IST
வரும் பிப்ரவரி 15, 2026 (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி மிகவும் விசேஷமாக வர உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மகத்தான விரத நாளில், விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி என்பது “சிவனுக்குரிய இரவு” என்ற அர்த்தத்தை கொண்டது. சிவபெருமானின் அருளைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், பாவங்களில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையில் நன்மைகள் பெருகும் நாளாகவும் இந்த நாள் போற்றப்படுகிறது. குறிப்பாக சிவபக்தர்களால் இந்த விரதம் மிகுந்த பக்தியுடனும், ஒழுக்கத்துடனும் அனுசரிக்கப்படுகிறது.

1 / 5
மகா சிவராத்திரி குறித்து பல புராணக் கதைகள் உள்ளன. ஒரு புராணக் கதைப்படி, சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய இரவு தான் மகா சிவராத்திரி என கூறப்படுகிறது. மற்றொரு கதைப்படி, சிவபெருமான் அன்னை பார்வதி தேவியை திருமணம் செய்துகொண்ட புனித இரவும் இதே நாளாகும். இந்த நாளில் சிவபெருமானையும் அன்னை பார்வதி தேவியையும் முழு பக்தியுடன் வழிபட்டால், விருப்பங்கள் நிறைவேறும் குடும்ப வாழ்க்கை சிறப்பாகும் துன்பங்கள், கஷ்டங்கள் நீங்கும் மன அமைதியும் ஆன்மீக உயர்வும் கிடைக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.

2 / 5
2026 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திதி: இந்த ஆண்டு மகா சிவராத்திரி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் வருகிறது. சதுர்த்தசி திதி பிப்ரவரி 15 மாலை தொடங்கி, பிப்ரவரி 16 மாலை வரை நீடிக்கிறது. அதனால் பிப்ரவரி 15 இரவு முழுவதும் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். மகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜை செய்வது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் நான்கு வேளைகளாக சிவபூஜை செய்து அபிஷேகம், அர்ச்சனை, நாம ஜபம் செய்தால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும்.

3 / 5
முதல் கால பூஜை: மாலை 06:11 முதல் இரவு 09:23 வரை. இரண்டாம் கால பூஜை: இரவு 09:23 முதல் நள்ளிரவு 12:36 வரை. மூன்றாம் கால பூஜை: அதிகாலை 12:36 முதல் 03:47 வரை. அன்னை பராசக்தி ஈசனை வழிபட்ட நேரமாக இது கருதப்படுகிறது. நான்காம் கால பூஜை: அதிகாலை 03:47 முதல் காலை 06:59 வரை. வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள்: சிவராத்திரி அன்று விரதமிருந்து இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி, குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.

4 / 5
இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள், அன்னை பராசக்தி வழிபட்ட மூன்றாம் கால பூஜையிலாவது கலந்து கொள்வது விசேஷம். பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 06:42 மணி முதல் மதியம் 03:10 மணிக்குள் விரதத்தை நிறைவு செய்யலாம். இந்த நாளில் பால், தயிர், தேன், நெய், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். விபூதி, வில்வ இலைகள், மலர்கள் அர்ப்பணிப்பு “ஓம் நம சிவாய” ஜபம் சிவ புராணம் அல்லது சிவ துதி பாராயணம் பாடுவது போன்றவற்றை செய்வது மிகவும் சிறந்ததாகும். மகா சிவராத்திரி என்பது ஒரு விரதம் மட்டுமல்ல; அது ஆன்மீக விழிப்புணர்வு, உள் சுத்தி, சிவ சிந்தனை ஆகியவற்றை தரும் புனித இரவாகும்.

5 / 5
Follow Us