AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vastu Tips: எந்த பறவை கூடு கட்டினால் வீட்டுக்கு ஆகாது தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டில் கூடு கட்டும் பறவைகள் மங்களகரமானவையா அல்லது அமங்களகரமானவையா என்பதை அறிவது முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புறா, சிட்டுக்குருவி போன்றவை நேர்மறை ஆற்றலைக் குறிக்கும். ஆனால், வௌவால், தேனீ கூடுகள் எதிர்மறை சக்திகளைக் குறித்து, துரதிர்ஷ்டம், நிதிப் பிரச்னைகள், குடும்பத் தகராறுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Vastu Tips: எந்த பறவை கூடு கட்டினால் வீட்டுக்கு ஆகாது தெரியுமா?
பறவைக்கூடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Jun 2025 15:47 PM IST

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிப்பதாகும். இது தனிமனிதர்களிடம் மட்டுமல்லாமல் பல வகைகளிலும் உள்ளது என சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி என்றால் நாம் வாழும் இந்த பூமி பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. அவை நாம் இருக்கும் இடங்களுக்கும் சில நேரங்களில் வருகிறது. அப்படியாக பறவைகள் வீட்டில் கூடு கட்டுவது என்பது வழக்கமான நிகழ்வு தான் என்றாலும் அவையெல்லாம் நாம் வசிக்கும் இடத்துக்கும், வாழ்க்கைக்கும் சாதகமாக அமைந்து விடாது என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் வீட்டுக்கு ஆகாத பறவைகளின் கூடுகளும், மங்களகரமாக கருதப்படும் பறவைகள் பற்றியும் காணலாம்.

பெரும்பாலானவர்களுக்கு வீடுகளில் பறவைகள் வளர்ப்பது என்பது அலாதி பிரியமாக உள்ளது. அதே சமயம் நம் வீடு தேடி வரும் பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைத்து உபசரிக்கவும் செய்கிறார்கள். இப்படியான நிலையில் ஜோதிடத்தின் படி பறவைகள் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. அந்த வகையில் அவை வீடுகளின் கூடு கட்டுவது இரண்டு வகையிலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.புறாக்கள் சிட்டுக்குருவிகள் ஆகியவை கூடு கட்டினால் அவை மங்களகரமானது என நம்பப்படுகிறது. இவை நேர்மறை ஆற்றலின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது

வீட்டுக்கு எதிர்மறையாக கருதப்படுபவை எவை?

வௌவால்: இரவுப் பறவையாக அறியப்படும் வௌவால்கள் அரிதாக வீடுகளில் கூடு கட்டும். ஆனால் இத்தகைய கூடு கட்டுவது ஒரு கெட்ட சகுனமாக சாஸ்திரத்தில் கருதப்படுகிறது. வீட்டில் வௌவால் கூடு இருந்தால், அது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும் என்பதை உணருங்கள். வௌவால்கள் பலவீனமானவை என்பதன் அடையாளமாகக் கருதப்படுகின்றன. வீட்டில் வௌவால்கள் இருப்பது, நுழைவது குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களுக்கு வழிவகுக்கும் என ஐதீகமாக உள்ளது. வெளவால்கள் இருளுடன் தொடர்புடைய உயிரினங்கள் என்பதால், அவற்றின் இருப்பு எதிர்மறை சக்திகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

தேனீ கூடு: தேனீக்கள் கொட்டினால் எப்படி வலிக்குமோ, அதேபோல் தான் அவற்றின் கூடு வீட்டில் இருந்தால் வளர்ச்சிக்கு ஒரு தடையாக அமையும். வீட்டில் ஒரு தேனீ கூடு இருப்பது சாஸ்திரத்தில் ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுவதில்லை. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் தேனீ கூட்டை கண்டால் உடனடியாக அகற்ற வேண்டும். தேன்கூடு உள்ள எந்த வீட்டிலும் அனைத்து விதமான வளர்ச்சிக்கும் தடைகள் ஏற்படும். மேலும் நிதி சிக்கல்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களிடையே சச்சரவுகள் அதிகரிக்கக்கூடும். மேலும் எதிர்மறை சக்திகளின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

(வாஸ்து சாஸ்திரங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி இந்த செய்தியானது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமாக விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் எதற்கும் பொறுப்பேற்காது)

Follow Us