AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீங்க ரோகிணி நட்சத்திரமா? .. வழிபட வேண்டிய கோயில் இதுதான்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாண்டவ தூதர் பெருமாள் கோவில், ரோகிணி நட்சத்திரக்காரர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகும். கிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது சென்ற வரலாற்றுடன் தொடர்புடைய இந்தக் கோவில், அதன் 25 அடி உயர பெருமாள் சிலை மற்றும் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.

நீங்க ரோகிணி நட்சத்திரமா? .. வழிபட வேண்டிய கோயில் இதுதான்!
பாண்டவ தூதர் பெருமாள் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 29 May 2025 13:34 PM IST

பொதுவாக ஜோதிடம் என்பது அனைவர் வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகள் ஆகியவை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் ராசிகள் ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வழிபாட்டுத் தலங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அப்படியாக ரோகினி நட்சத்திரக்காரர்கள் வழிபடக்கூடிய காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாண்டவ தூதர் பெருமாள் திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயிலில் பெருமாள் பாண்டவ தூதர் என்ற பெயரில் அருள் பாலிக்கும் நிலையில் தாயாராக சத்தியபாமா மற்றும் ருக்மணி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். இத்திருக்கோயிலானது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயில் உருவான வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

கோயில் உருவான வரலாறு

பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கௌரவர்களிடம் தனது நாட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து துரியோதனிடம் ஆளுக்கொரு வீடு என ஐந்து வீடுகளை கேட்டு வாங்குவதற்காக கிருஷ்ணர் தூது சென்றார். அவரை அவமானப்படுத்த நினைத்த துரியோதனன் கிருஷ்ணர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே ஒரு பெரிய பாதாளத்தை உண்டாக்கி அதன் மீது இலைகளைப் போட்டு மறைத்தான். அவனது திட்டப்படி கிருஷ்ணரும் வந்து அமர்ந்தார். இருக்கை சரிந்து அவர் பாதாளத்துக்குள் விழுந்தார். அங்கு அவரை சில வீரர்கள் தாக்கினர். இதனையடுத்து கிருஷ்ணர் அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். இப்படியாக பாண்டவருக்காக தூது சென்ற கிருஷ்ணரை பாண்டவர் தூத பெருமாள் என அழைக்கின்றனர்.

யுத்தம் முடிந்த பிறகு வெகு காலத்திற்கு பின் பாரத கதையை கேட்பதற்காக ஜனமேஜயர் என்ற மகாராஜா வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் வந்தார். கிருஷ்ணர் தூது சென்ற போது விஸ்வரூப தரிசனத்தை காட்டிய இடத்தில் நானும் தரிசனம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கான வழியை மகரிஷி கூறிய நிலையில் காஞ்சிபுரத்திற்கு வந்து தவம் செய்தார். இதனை தொடர்ந்து பெருமாள் தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்சியருளினார்.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் இருக்கும் பெருமாள் சிலை 25 அடி உயரம் கொண்டதாகும். அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை பார்ப்பதற்கு சுற்றுவட்டாரச் சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இந்த பெருமாள் இங்குள்ள கல்வெட்டுகளில் தூதுஹரி என குறிப்பிடப்பட்டுள்ளார். கிருஷ்ணர் இந்த தலத்தில் தன் பாதங்களின் மூலம் பூமியில் எழுத்தி விஸ்வரூப சக்திகளை கொண்டு அருள்கிறார் என நம்பப்படுகிறது. அதனால் இங்கு அடி பிரதட்சணம் மற்றும் அங்க பிரதட்சணம் செய்பவர்களுக்கு துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகும் என்பது ஐதீகமாக உள்ளது.

ரோகிணி தேவி இந்த கோயிலில் பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பாக்கியம் பெற்றால் சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களின் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகு தான் ஏனைய நட்சத்திர தேவதை மணந்தார் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த மக்கள் புதன், சனிக்கிழமை மற்றும் அஷ்டமி திதிகளில் அல்லது ஒவ்வொரு மாதமும் 8ம் தேதிகளில் வந்து வழிபடுவது சிறந்த பலனை தரும் என்பது நம்பிக்கையாகும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள்

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் எப்போதும் கற்றறிந்த அறிஞர்களுடன் நட்பை பேணுபவராக திகழ்பவர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் இயல்பாக உலகை சுற்றி வர விருப்பம் கொண்டவர்களாக இருப்பார். இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு கொண்ட இவர்கள் இல்வாழ்க்கையில் சிறந்து விளக்குவார்கள். இவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த பாண்டவ தூதர் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய விஷேச தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கோயில் பற்றி பதிவிடப்படும் தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us