Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மன நிம்மதி இல்லையா? .. 3 வழிகள் தான்.. ஆன்மிகம் சொல்லும் டிப்ஸ்!

இன்றைய வேகமான வாழ்வில், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு பொதுவான பிரச்சனைகளாக உள்ளன. பிடித்த வேலையைச் செய்வது, தியானம் செய்தல் மற்றும் ஆன்மீக நூல்களைப் படிப்பது. இவை மனதிற்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும் என கூறப்படுகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

மன நிம்மதி இல்லையா? .. 3 வழிகள் தான்.. ஆன்மிகம் சொல்லும் டிப்ஸ்!
மன அமைதிக்கான டிப்ஸ்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 28 May 2025 12:46 PM

பரந்து விரிந்த இந்த உலகத்தில் குழந்தைகள் முதல் மிக வயதானவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள்கள் வசிக்கின்றனர். வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அனுபவங்கள் நிறைந்ததாக இருக்கும். பொருளாதாரம், சாதி, மதம், பழக்கவழக்கங்கள் என பலவற்றில் பிரிந்து கிடக்கும் மக்களின் பிரச்சனைகள் பொதுவாகவே இருக்கும். குறிப்பாக பிரச்சனைகளின் விளைவாக மன நிம்மதி பாதிக்கப்படுவது இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரது கவலையாகவும் உள்ளது. எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும், செல்வந்தராக ஜொலித்தாலும் மன நிம்மதி இல்லாவிட்டால் வாழ்க்கையில் எப்பேர்பட்ட சந்தோஷம் கிடைத்தாலும் அதனை நம்மால் அனுபவிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இப்படியான நிலையில்  மன நிம்மதி பெறுவதற்கான மூன்று வழிமுறைகள் பற்றி அறிஞர்கள் பலரும்  தெரிவித்து வருகின்றனர். அதனைப் பற்றி நாம் காணலாம்.

மேலும் இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் தேவையாக இருப்பது மன அமைதி தான். இது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதில் இவர்களுக்கு மட்டும் விலக்கு என்பதெல்லாம் கிடையாது. ஆனால் மூன்று எளிமையான வழிமுறைகளை பின்பற்றி நாம் மன நிம்மதியை பெற முயற்சிக்கலாம்.

அந்த 3 வழிமுறைகள் இதுதான்

  1. பிடித்த விஷயத்தை செய்வது: ஒரு நாளில் நாம் பல விஷயங்களை பார்க்கிறோம், கடந்து செல்கிறோம். நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறோம். அப்போது நம் மனது சோர்வு அல்லது சலிப்படைந்து விடுகிறது. அந்த மாதிரி நேரங்களில் நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும். சிலருக்கு சோகமாக இருக்கும் போது தூங்குவதற்கு பிடிக்கும், சிலருக்கு சாப்பிடுவது பிடிக்கும், இன்னும் சிலருக்கு வெளியில் வாகனத்தில் சென்று வருவது பிடிக்கும், தியேட்டருக்கு செல்வார்கள், கோயிலுக்கு செல்வார்கள். புத்தகம் படிப்பார்கள்.  இப்படியாக நமக்கு பிடித்த விஷயத்தை செய்வதன் மூலம் மனதில் இருந்த அழுத்தம் நீங்கி நிம்மதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  2. தியானம் செய்வது: தியானம் செய்வது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. தியானத்தின் முக்கியத்துவம் பற்றி பல அறிஞர்கள் தத்துவ ஞானிகள் தெரிவித்து இருந்தாலும் இதனை அன்றாட வாழ்வில் பின்பற்றுபவர்களிடம் கேட்டால் அதன் பலனை தெரிவிப்பார்கள். இதற்காக நாம் சில நிமிடங்கள் செலவிட்டாலே போதும். ஆனால் தியானம் செய்ய நம் மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் சவாலான ஒரு காரியம். அதை நாம் சரியாக செய்து விட்டால் நிதானமாகவும் சரியானதாகவும் ஒரு முடிவை வாழ்க்கையில் எடுத்து வெற்றி பெறலாம். இதுவே மன நிம்மதிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
  3. திருவாசகம் படிப்பது: ஆன்மீக ரீதியாக பார்க்கும் போது மன நிம்மதி அடைய கோயிலுக்கு செல்லும் வழக்கம் பல பேரிடம் உள்ளது. அங்கிருக்கும் அமைதி மற்றும் இறையருள் ஆகிய இரண்டும் எவ்வளவு பெரிய கஷ்டம் இருந்தாலும் நம் மனதின் சுமையை குறைக்கும். அதேபோல் திருவாசகத்தின் முதல் பகுதியான சிவபுராணத்தை படிக்கலாம். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் படிக்கும் போது நம்மை அறியாமல் மனதிற்குள் ஒரு மாற்றம் நிகழ்வது காணலாம். ஆனால் படிக்கிறோம் என்கிற பெயரில் இல்லாமல் அதன் பொருள் உணர்ந்து படிக்கும்போது மனதில் உள்ள பிரச்சனைகளுக்கு அது முற்றுப்புள்ளி ஆக அமையும் என சொல்லப்பட்டுள்ளது.

(ஆன்மிக ரீதியாக சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)

அயோத்தி பட இயக்குநரின் அடுத்தப் படம்... கதாநாயகன் யார்?
அயோத்தி பட இயக்குநரின் அடுத்தப் படம்... கதாநாயகன் யார்?...
இந்தியாவில் 1,300 ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. WHO எச்சரிக்கை..!
இந்தியாவில் 1,300 ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. WHO எச்சரிக்கை..!...
RBI விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: பெரிய கருப்பன்
RBI விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: பெரிய கருப்பன்...
ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை.. பாகிஸ்தானுக்கு PM மோடி எச்சரிக்கை!
ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை.. பாகிஸ்தானுக்கு PM மோடி எச்சரிக்கை!...
கமல் ஹாசனின் பேச்சால் நெகிழ்ந்த நடிகர் நானி... வைரலாகும் வீடியோ!
கமல் ஹாசனின் பேச்சால் நெகிழ்ந்த நடிகர் நானி... வைரலாகும் வீடியோ!...
கவுன்சிலர்கள் மோதல்.. தேசிய கீதம் பாடி நிறுத்த முயன்ற அதிகாரிகள்!
கவுன்சிலர்கள் மோதல்.. தேசிய கீதம் பாடி நிறுத்த முயன்ற அதிகாரிகள்!...
உலகின் மிக சிறிய கார் - டிரைவர் எப்படி இந்த காரை ஓட்டுவார்?
உலகின் மிக சிறிய கார் - டிரைவர் எப்படி இந்த காரை ஓட்டுவார்?...
உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்..!
உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்..!...
மலரே நின்னை காணாதிருந்நால்... 10 ஆண்டுகளை நிறைவு செய்தது பிரேமம்!
மலரே நின்னை காணாதிருந்நால்... 10 ஆண்டுகளை நிறைவு செய்தது பிரேமம்!...
இறுதிக்கு செல்லும் அணி எது..? குவாலிபையர் 1ல் மோதும் RCB vs PBKS!
இறுதிக்கு செல்லும் அணி எது..? குவாலிபையர் 1ல் மோதும் RCB vs PBKS!...
வங்கிகள் கடனுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் முறைகள்
வங்கிகள் கடனுக்கு கூடுதல் தொகை வசூலிக்கும் முறைகள்...