Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tirunelveli: 2025 நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் எப்போது தெரியுமா?

Nellaiappar Car Festival: 2025 ஆம் ஆண்டு நெல்லையப்பர் கோயிலின் ஆனித்தேரோட்டம் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 1505 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட 450 டன் எடையுள்ள சுவாமி தேர், 518 ஆண்டுகளாக மனித சக்தியால் இழுக்கப்பட்டு வருகிறது. பத்து நாள் விழாவின் 9-வது நாளில் நடைபெறும் இந்தத் தேரோட்டம், தென் தமிழகத்தில் பிரபலமானதாகும்.

Tirunelveli: 2025 நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் எப்போது தெரியுமா?
நெல்லையப்பர் ஆனித்தேரோட்டம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 11 Jun 2025 11:36 AM

பொதுவாக அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களிலும் ஆண்டு முழுக்க பல்வேறு விசேஷ தினங்கள் சிறிய அளவு தொடங்கி மிக பிரமாண்டமானது வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோயில்களில் தேரோட்டம் என்றால் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி கொள்ளும். தேரின் அளவு சிறியது, பெரியது என்றெல்லாம் கணக்கில்லை. நம்ம ஊரின் இறைவன் நம்மை காண வீதி வலம் வருகிறார் என ஊரே கூடி அவரை வரவேற்பார்கள். அந்த அளவுக்கு இந்த திருவிழா பிரமாண்டமாக இருக்கும். அப்படியான வகையில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் (Tirunelveli Nellaiappar Temple) தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆனித் தேரோட்டம் (Nellaiappar Car Festival) எப்போது என்பது பற்றி காணலாம்.

நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயில்

தென் பொதிகை மலையில் தோன்றி வற்றாத ஜீவ நதியாக ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஊர் தான் திருநெல்வேலி. அங்கு பல்வேறு தெய்வங்கள் அருள் பாலிக்கும் ஏராளமான கோயில்கள் உள்ளது. திருநெல்வேலியின் மிக முக்கியமான கோயில் என்றால் நாம் அனைவரின் நினைவுக்கும் வருவது நெல்லையப்பர் கோயில் தான். இங்கு காந்திமதி சமேத நெல்லையப்பர் அருள் பாலித்து வருகின்றனர். நெல்லுக்கு வெளியிட்டு காத்ததால் இவர் நெல்லையப்பர் என அழைக்கப்படுவதாக புராணங்கள் சொல்கிறது. இக்கோயில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவ ஆலயங்களில் ஒன்றாக உள்ளது.

தேரோட்ட திருவிழா

காந்திமதிக்கும் நெல்லையப்பருக்கும் தனித்தனி கோயில் எழுப்பப்பட்டு அவை கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆணி தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் நெல்லையப்பர் பேரானது தேரானது சுமார் 450 டன் எடை கொண்டது. 518 ஆண்டுகள் இதுவரை தேரோட்டம் நடைபெற்றுள்ள நிலையில் பத்து நாட்கள் திருவிழாவின் 9ஆவது நாள் இந்த திருத்தேரோட்டம் நடைபெறும். இந்த தேரானது 1505 ஆம் ஆண்டு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. முதல் இரண்டு பெரிய தேர்ளாக அறியப்படும் திருவாரூர் மற்றும் திருவில்லிபுத்தூர் தேர்தல் இயந்திரங்களின் துணையுடன் இழுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நெல்லையப்பர் முழுக்க முழுக்க மனித சக்திகளால் இயக்கப்படும் தேராக சிறப்பு பெற்றுள்ளது.

விநாயகர், முருகன், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்தல் இழுக்கப்படும். அதிகாலை தொடங்கி இரவு 10 மணி வரை தேர் திருவிழா நடைபெறும்.

2025 ஆம் ஆண்டு தேர் திருவிழா எப்போது?

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான நெல்லையப்பர் கோயில் திருத்தேரோட்டம் வரும் ஜூலை 8ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த ஆனி திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் ஜூன் 30-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்த் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் முழு வீச்சில் செய்து வருகின்றனர். இந்த நிகழ்வில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.