AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vastu Tips: புது வீடு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

புதிய வீடு வாங்குவது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவாகும். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் திசை, வடிவம், சமையலறை, படுக்கையறை அமைவிடம் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிழக்கு அல்லது வடக்கு நோக்கிய வீடுகள் நல்ல அறிகுறியாகும். அதேசமயம் சதுர அல்லது செவ்வக வடிவ மனையைத் தேர்ந்தெடுக்கவும்.

Vastu Tips: புது வீடு வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய வாஸ்து விஷயங்கள்!
புது வீடு வாஸ்து குறிப்புகள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Jun 2025 15:31 PM IST

எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கோ அல்லது நம் சந்ததியினர் வாழ்வதற்கோ ஒரு வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு பெரிய கனவாகவே உள்ளது. புதிய வீடு வாங்குவது ஒரு பெரிய முடிவாகும். அது நம் நிதி நிலைமை தொடங்கி அஸ்திவாரத்தையே அசைக்கக்கூடியது. அதனை நாம் சரியாக செய்து விட்டால் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பையும் ஆகியவையும் ஒரு வீட்டினுள் இருக்கிறது என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. இப்படிப்பட்ட வீட்டில் வாஸ்து விதிகள் சரியாக இருந்தால் மட்டுமே எல்லாம் நிறைவாக இருக்கும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இல்லையெனில் வாழ்க்கை பிரச்சனைகளால் நிறைந்ததாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அப்படியாக புதிய வீடு வாங்குவதற்கு முன் சரிபார்க்க வேண்டிய சில முக்கியமான வாஸ்து விதிகள் பற்றி நாம் காணலாம்.

என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டின் திசை, வடிவம் மற்றும் சமையலறை மற்றும் படுக்கையறைகள் அமைந்துள்ள இடம் மிகவும் முக்கியமானதாகும். அதிலும் வீட்டின் பிரதான நுழைவாயில் நேர்மறை மற்றும் தெய்வீக சக்திகள் நுழைவதற்கான முக்கிய இடமாகும். எனவே நீங்கள் ஆன்மீகம், கற்பித்தல் அல்லது படைப்புத் துறைகளில் இருப்பவர்களாக இருந்தால் கிழக்கு நோக்கிய வீடு மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படும். அதேசமயம் வணிகம், நிதி அல்லது புதிய வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு வடக்கு திசை நோக்கிய வீடு கௌரவம், புகழ், செழிப்பு, செல்வத்தை தரும் என நம்பப்படுகிறது.

அதேசமயம், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கிய வீடு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.  இது சண்டைகள், பிணிகள் மற்றும் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஒருவேளை நீங்கள் அதை வாங்க விரும்பினால், வாஸ்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று முடிவுகளை எடுக்கலாம். சில ராசி, நட்சத்தினருக்கு காலம் கனியவும் வாய்ப்புள்ளது. அதேபோல் தென்மேற்கு நோக்கிய வீடு பொதுவாக நல்லதாக கருதப்படுவதில்லை.

உங்கள் வீடு அமைந்திருக்கும் மனை எப்போதும் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்க வேண்டும். முக்கோண, வட்டமான, ஒழுங்கற்ற வடிவிலான மனைகளோ அல்லது வெட்டப்பட்ட மூலைகளைக் கொண்ட மனைகளாக இருந்தால் அதனைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலையும் துரதிர்ஷ்டத்தையும் தரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

வீட்டில் சமையலறைக்கு மிகவும் சாதகமான திசை தென்கிழக்காகும். ஏனெனில் அது அக்னி பகவான் குடியிருக்கும் இடமாகும். அதேசமயம் சமையலறை வடகிழக்கு அல்லது தென்மேற்கில் இருப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது கடுமையான வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. வீட்டின் மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் பிரதான படுக்கையறை தென்மேற்கு திசையில் இருப்பது நல்லது. இது உறவுகளில் ஸ்திரத்தன்மை, நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை தரும். அதேசமயம் பிரதான படுக்கையறை வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இக்கட்டுரை செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us