Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vastu Tips: வீட்டிற்குள் செருப்பு அணிவீர்களா? – இந்தெந்த பிரச்னை வரலாம்!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டினுள் செருப்பு அணிவது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் எனக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் மன அழுத்தம், பதற்றம் அதிகரிக்கும். கிருமிகள் பரவும் அபாயமும் உள்ளது. வீட்டிற்குள் தனி செருப்புகளைப் பயன்படுத்தி, வெளியில் பயன்படுத்திய செருப்புகளை வெளியேயேயும் வைக்க வேண்டும் என கூறப்படுகிறது.

Vastu Tips: வீட்டிற்குள் செருப்பு அணிவீர்களா? – இந்தெந்த பிரச்னை வரலாம்!
வீட்டில் செருப்பு அணிவதால் உண்டாகும் பாதிப்புகள்Image Source:
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 10 Jul 2025 13:47 PM

வாஸ்து சாஸ்திரம் என்பது பலருக்கும் பலவிதமான பலன்களை தருவதாக நம்பப்படுகிறது. அதனால் தான் நிலம் சார்ந்த விஷயம் மேற்கொள்ளும்போது இதனை கண்டிப்பாக பின்பற்றுகிறார்கள். சில சமயங்களில் நாம் செய்யும் தவறுகள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் பலருக்கும் வீட்டினுள் செருப்பு அணிந்து கொள்ளும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வெளியில் செல்லும்போது மட்டுமே காலணிகளை பயன்படுத்தி வந்தோம். ஆனால் காலில் வலி, கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களால் வீட்டிற்குள் செருப்பு அணிகிறார்கள். இதற்கென பிரத்யேகமாக காலணிகளும் வடிவமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வீட்டினுள் செருப்பு அணிந்தால் என்னென்ன நடக்கும் என்பது பற்றிக் காணலாம்.

சாஸ்திரம் சொல்லும் பிரச்னைகள்

சாஸ்திரப்படி, வீட்டிற்குள் நுழையும் போது காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டிற்கு வெளியே விட்டுவிட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. காலணிகளுடன் வீட்டிற்குள் நுழைந்தால், எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையும் என்பது அர்த்தமாகும். இது வீட்டின் சூழலைக் கெடுக்கும் என நம்பப்படுகிறது. இதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களிடையே மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கலாம். அதுமட்டுமல்லாமல் செருப்புகள் மூலமாக கிருமிகள் வீட்டில் ஒட்டிக்கொள்வதாக நம்பப்படுகிறது.

இதனால் பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால் தான் வெளியே சென்று வந்ததும் கால்களோடு சேர்த்து காலணிகளையும் கழுவும் பழக்கம் உள்ளது.

இயற்கையாகவே வீட்டினுள் இருக்கும் சூழ்நிலை மிகவும் அமைதியானதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அதனால்தான் வீட்டின் வளிமண்டலத்தை தூய்மையாகவும், புனிதமாகவும் வைத்திருக்க, அதை எதிர்மறை சக்தியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. பூஜையறை, சமையலறை போன்ற இடங்களில் முடிந்தவரை செருப்பு அணிவதை தவிருங்கள்.

Also Read:கறிவேப்பிலை செடிக்கும் வாஸ்து சாஸ்திரங்கள் உண்டு.. வாஸ்து நம்பிக்கை சொல்வது இதுதான்!

என்ன செய்யலாம்?

நீங்கள் ஒருவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டிற்குள்ளும் வெளியேயும் காலணிகளை பயன்படுத்துவீர்கள் என்றால் அதனை வீட்டில் கூட தனித் தனியாக தான் வைத்திருக்க வேண்டும். வீட்டில் நுழைவதற்கு முன்பு வெளியில் பயன்படுத்தப்படும் காலணிகள் மற்றும் செருப்புகளை அகற்ற வேண்டும். வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டிற்குள் மட்டுமே அணிய வேண்டும். வீட்டிற்கு வெளியே கொண்டு வர வேண்டாம்.

சாஸ்திரத்தில் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் காலணிகள் அல்லது செருப்புகளுடன் வீட்டிற்குள் நுழைவது மங்களகரமானது அல்ல என்று கூறுகின்றன. அதேபோல் வீட்டிற்கு வெளியே காலணிகளைக் கழற்றுவது மரியாதை மற்றும் பணிவின் அடையாளமாகக் கருதப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது. மேலும் வீட்டில் கழிவறைக்கு பயன்படுத்த தனி செருப்பை வைக்க வேண்டும். சுத்தப்படுத்தி விட்டோம் என்ற பெயரில் அதனை பெட்ரூம், சமையலறை என போட்டு செல்லக்கூடாது. இதெல்லாம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடும்.

Also Read: திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் இத்தனை சிறப்புகளா?

மேலும் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி செருப்பு வைக்கும் இடத்தை மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைப்பது நல்லது என கூறப்படுகிறது. சிலர் அதை தலை கீழாக வைத்தால் பிரச்னை உண்டாகும். அதேபோல் வீட்டு வாசலில் வைக்கப்படும் கண்ணாடியில் செருப்பு காட்சிப்படுத்தக்கூடாது.

(சாஸ்திர மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் கிடையாது. டிவி9 தமிழ் எதற்கும் பொறுப்பேற்காது)