AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

June Month: “வைகாசி விசாகம், அமாவாசை, பௌர்ணமி” – ஜூன் மாத விசேஷ தினங்கள்!

ஜூன் மாதம் முக்கிய விசேஷ தினங்கள் பற்றிப் பார்க்கலாம். இந்த மாதத்தில் முருகனுக்குரிய நாளாக வைகாசி விசாகம் வருகிறது. அதேபோல் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகையும் வருகிறது. அதேபோல் சங்கடஹர சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட பல்வேறு தினங்கள் எப்போது வருகிறது என பார்க்கலாம்.

June Month: “வைகாசி விசாகம், அமாவாசை, பௌர்ணமி” – ஜூன் மாத விசேஷ தினங்கள்!
ஜூன் மாத விசேஷ தினங்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 31 May 2025 10:36 AM IST

ஜூன் மாதம் வந்தாலே வசந்த காலம் வந்து விட்டது என சொல்லலாம். ஆடியில் வீசும் சூறைக்காற்றுக்கு ஆரம்பமே ஜூன் மாதத்தில் தெரிந்து விடும். அதேபோல் தென்மேற்கு பருவமழையும் இதமான சூழலை நமக்கு அருளும். மேலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என பல நிகழ்வுகளுக்கு நடுவே ஆன்மிக ரீதியாகவும் ஜூன் மாதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி காணலாம். ஜூன் மாதம் தமிழ் மாதங்களில் வைகாசி, ஆனி ஆகிய இரு மாதங்கள் கலந்தது என்பது நாம் அனைவரும் அறிந்தது. பஞ்சாங்கத்தைப் பொறுத்தவரை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் தலா 14 வகையான திதிகள் உள்ளது. அமாவாசை, பௌர்ணமி, அமாவாசை திதிகள் மட்டும் மாதத்திற்கு ஒருநாள் வரும்.

இப்படியான நிலையில் ஜூன் மாதம் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாக முருகனுக்குரிய வைகாசி விசாகம் (ஜூன் 9) வருகிறது. அதனைத் தவிர்த்து ஜூன் 7 ஆம் தேதி இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வருகிறது. மேலும் வைஷ்ணவ ஏகாதசி, ஷஷ்டி விரதம், அமாவாசை, பௌர்ணமி, சுபமுகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் எந்தெந்த தேதியில் வருகிறது என்பது பற்றிக் காணலாம்.

ஜூன் மாதத்தின் முக்கிய விசேஷ தினங்கள்

வைகாசி மாத நிகழ்வுகள்

  • ஜூன் 1 – ஞாயிற்றுக்கிழமை – வைகாசி 18 – ஷஷ்டி விரதம்
  • ஜூன் 2 – திங்கட்கிழமை – வைகாசி 19 – வளர்பிறை ஸப்தமி
  • ஜூன் 3 – செவ்வாய்கிழமை – வைகாசி 20 – வளர்பிறை அஷ்டமி / கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்
  • ஜூன் 4 – புதன்கிழமை – வைகாசி 21 – வளர்பிறை நவமி / வாஸ்து செய்ய சிறந்த நாள்
  • ஜூன் 5 – வியாழக்கிழமை – வைகாசி 22 – வளர்பிறை தசமி / சுபமுகூர்த்தம்
  • ஜுன் 6 – வெள்ளிக்கிழமை – வைகாசி 23 – வளர்பிறை ஏகாதசி / சுபமுகூர்த்தம்
  • ஜூன் 7 – சனிக்கிழமை – வைகாசி 24 – வைஷ்ணவ ஏகாதசி / பக்ரீத் பண்டிகை
  • ஜூன் 8 – ஞாயிற்றுக்கிழமை – வைகாசி 25 – பிரதோஷம் / சுபமுகூர்த்தம்
  • ஜூன் 9 – திங்கட்கிழமை – வைகாசி 26 – வைகாசி விசாகம்
  • ஜூன் 10 – செவ்வாய்கிழமை – வைகாசி 27 – பௌர்ணமி
  • ஜூன் 14 – சனிக்கிழமை – வைகாசி 31 – சங்கடஹர சதுர்த்தி

ஆனி மாத நிகழ்வுகள்

  • ஜூன் 15 – ஞாயிற்றுக்கிழமை – ஆனி 1 – திருவோண விரதம்/ கரிநாள்
  • ஜூன் 16 – திங்கட்கிழமை – ஆனி 2 – சுபமுகூர்த்தம் / தேய்பிறை பஞ்சமி
  • ஜூன் 17 – செவ்வாய் கிழமை – ஆனி 3 – தேய்பிறை ஷஷ்டி விரதம்
  • ஜூன் 18 – புதன்கிழமை – ஆனி 4 – தேய்பிறை அஷ்டமி
  • ஜூன் 19 – வியாழக்கிழமை – ஆனி 5 – தேய்பிறை நவமி / ராகுல்காந்தி பிறந்தநாள்
  • ஜூன் 20 – வெள்ளிக்கிழமை – ஆனி 6 – கரிநாள்
  • ஜூன் 21 – சனிக்கிழமை – ஆனி 7 – சர்வ ஏகாதசி
  • ஜூன் 22 – ஞாயிற்றுக்கிழமை – ஆனி 8 – கார்த்திகை விரதம் / நடிகர் விஜய் பிறந்தநாள்
  • ஜூன் 23 – திங்கட்கிழமை – ஆனி 9 – மாத சிவராத்திரி / பிரதோஷம்
  • ஜூன் 25 – புதன்கிழமை – ஆனி 11 – அமாவாசை
  • ஜூன் 26 – வியாழக்கிழமை – ஆனி 12 – சந்திர தரிசனம்
  • ஜூன் 27 – வெள்ளிக்கிழமை – ஆனி 13 – வளர்பிறை சுபமுகூர்த்தம்
  • ஜூன் 29 – சனிக்கிழமை – ஆனி 15 – வளர்பிறை சதுர்த்தி விரதம்

(மாத காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. திதிக்கான சரியான நேரங்களில் மாற்றம் ஏற்படலாம். அதனால் இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us