AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நட்புக்குரிய 4 குணங்கள்.. இதெல்லாம் உங்க ஃப்ரெண்ட் கிட்ட இருக்கா?

சாணக்கியரின் சாணக்கிய நீதி நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த விஷயத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதில் எல்லா நண்பர்களையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்றும், உண்மை நட்பு அரிது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகம், ரகசியங்களைப் பாதுகாத்தல், சரியான ஆலோசனை வழங்குதல் போன்றவை நட்புக்கான குணங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நட்புக்குரிய 4 குணங்கள்.. இதெல்லாம் உங்க ஃப்ரெண்ட் கிட்ட இருக்கா?
நட்புக்குரிய குணங்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 27 May 2025 16:17 PM IST

வாழ்க்கையில் என்னதான் பல உறவுகள் இருந்தாலும் நண்பன் போல யாரும் இல்லை என சொல்லும் அளவுக்கு புனிதமான பந்தமாக பல்வேறு காலக்கட்டத்திலும் அந்த நட்பு திகழ்கிறது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பன் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனை நாம் வாழ்நாள் முழுவதும் தேடுவோம். நட்பாக இருப்பவர் ஒவ்வொரு இன்பத்திலும் துக்கத்திலும் நம்முடன் இருப்பவர், நம்மிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடியவராக, நம்மைப் பற்றி சிந்திக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் எல்லோருக்கும் அப்படி ஒரு நண்பன் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஆனால் ஆச்சார்ய சாணக்கியர் தன்னுடைய சாணக்ய நீதியில் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு நண்பரை நம்புவதற்கான காரணங்களும், தெளிவான வழிகாட்டுதல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லோரையும் உங்கள் நண்பராக்கி கொள்ள முடியாது என்றும், ஒவ்வொரு நண்பரையும் கண்மூடித்தனமாக நம்ப முடியாது என்றும் சாணக்கியர் தெரிவித்துள்ளார். அதேசமயம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வையும் தெரிவிக்கக்கூடிய நண்பர்களும் இருக்கவே செய்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாக ஒரு நல்ல நண்பனுக்கு இருக்கக்கூடிய குணங்கள் பற்றிக் காணலாம்.

நண்பனுக்குரிய 4 குணங்கள் என்னென்ன?

அதாவது தியாகத்தின் குணம் கொண்ட ஒரு நண்பன் வாழ்க்கையில் இருந்தால் அவனை கைவிடக்கூடாது. தன் சுயநலத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தன் நண்பனின் நன்மைக்காக முடிவுகளை யார் எடுக்கிறானோ உனக்காக தன் சொந்த மகிழ்ச்சியைத் தியாகம் செய்பவனாக இருப்பவனே உண்மையான நண்பன் என்பதை உணர்ந்து கொள். அவன் வாழ்நாள் முழுவதும் உனக்கு ஒரு விசுவாசமான நண்பனாக நடந்து கொள்வான். அவனை நீ எல்லா சூழலிலும் நம்பலாம். அப்படிப்பட்டவனை வாழ்க்கையில் கைவிடக் கூடாது.

உங்கள் வாழ்க்கையில் உங்கள் ரகசியங்களை எல்லாம் ஒருவர் தெரிந்து வைத்திருப்பார். அந்த நபர் எந்த சூழ்நிலையிலும் உங்கள் வார்த்தைகளையும் ரகசியங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதவராகவும் இருப்பார். உயிரே போனாலும் உங்களைப் பற்றி தவறாகவோ,நீங்கள் செய்வதை தனக்கு சாதகமாகவோ பயன்படுத்த நினைக்க மாட்டார். தவறே செய்தாலும் உங்கள் இமேஜை காப்பாற்ற நினைப்பார். அத்தகைய நபர் உண்மையான நட்பை மதிக்கும் நபர். அவரை வாழ்க்கையில் எப்போதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டாலும் எப்போதும் உங்களுக்கு அறிவுரை கூறும் ஒரு நண்பர் அவசியம் தேவையாகும். அவர் சூழ்நிலைக்கு ஏற்ப எப்போதும் சரியான ஆலோசனை வழங்கி நீங்கள் செய்யும் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டுவார். வாழ்க்கையில் நீங்கள் முன்னேற சரியான திசையைக் காண்பிப்பார். அவர் ஒரு உண்மையான நண்பராகவே கடைசி வரை இருப்பார். அத்தகைய நண்பரை நம்புவது மிக மிக முக்கியமானது.

கடினமான காலங்களில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் உங்களை விட்டுக்கொடுக்காதவனே நல்ல நண்பன் என்று சாணக்கியர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, ​​இது போன்ற கடினமான நேரங்களிலும் உங்கள் நண்பராகவும் ஆதரவாகவும் இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் ஒரு நண்பராக குருட்டுத்தனமாக நம்பலாம்.

(ஆச்சார்ய சாணக்கியரின் சாணக்கிய நீதியில் இருந்து இந்த செய்திக்கான தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us