AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aadi Month Horoscope 2026: ஆடி மாதம் அமோக லாபத்தைப் பெறப்போகும் ராசிகள் எவை?

Aadi Month Horoscope 2026: ஆடி மாத சூரிய பெயர்ச்சியால் கடகம், ரிஷபம், கன்னி மற்றும் சிம்ம ராசியினருக்குப் புதிய தொழில் ஒப்பந்தங்களும், இரட்டிப்பு லாபமும், பதவி உயர்வும் தடையின்றித் தேடிவரும். மேஷம், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்குப் பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தாலும், அதற்கேற்ற ஆடம்பரச் செலவுகளும் வேலைப்பளுவும் கலவையாக அதிகரிக்கும்.

Aadi Month Horoscope 2026: ஆடி மாதம் அமோக லாபத்தைப் பெறப்போகும் ராசிகள் எவை?
ஆடி மாத ராசி பலன்
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Jul 2026 05:02 AM IST

ஆன்மிகச் சிறப்புகள் நிறைந்த ஆடி மாதத்தில், நவக்கிரகங்களின் தலைவனான சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த கிரக மாற்றத்தின் காரணமாக ஒட்டுமொத்த பிரபஞ்ச ஆற்றலிலும், மனிதர்களின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் நிகழவுள்ளன. குறிப்பாக, இந்த மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாட்டைத் தீவிரமாக மேற்கொள்ளும் போது, ஜாதக ரீதியாக இருக்கும் தோஷங்கள் விலகும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும். இந்த ஆடி மாதத்தில், 12 ராசிகளுக்கும் ஏற்படவுள்ள பொதுவான சுப மற்றும் அசுப பலன்கள் எவ்வாறு அமையப்போகின்றன என்பதைச் செய்தித் தொகுப்பாகக் காண்போம்.

அபாரமான அதிர்ஷ்டத்தை எட்டிப்பிடிக்கும் ராசிகள்

நடப்பு ஆடி மாதத்தில் கடகம், கன்னி, ரிஷபம் மற்றும் சிம்ம ராசிக்காரர்கள் அபரிமிதமான யோகங்களைப் பெறவுள்ளனர். கடக ராசியினருக்குப் புதிய முதலீடுகளின் மூலம் எதிர்பார்த்ததை விடவும் இரட்டிப்பு லாபம் கிடைக்கப் போகிறது. ரிஷப மற்றும் கன்னி ராசி அன்பர்களுக்குத் தொழில் ரீதியாக நீண்ட நாட்களாகக் காத்திருந்த வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளும், புதிய ஒப்பந்தங்களும் எளிதில் கைகூடும். சிம்ம ராசியினரைப் பொறுத்தவரை, அலுவலகத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவோடு புதிய பதவிகளையும், பாராட்டுக்களையும் பெற்றுத் தங்களின் திறமையை நிரூபிப்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி அரங்கேறி மகிழ்ச்சியை நிலைநிறுத்தும் மாதமாக இது அமையவுள்ளது.

சராசரியான முன்னேற்றத்தைக் காணும் ராசிகள்

மேஷம், துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் கலவையான பலன்களையே அள்ளித் தரவுள்ளது. இந்த ராசியினருக்குப் பொருளாதார ரீதியாகப் பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தாலும், அதற்கு இணையாகத் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளும் வரிசைகட்டி நிற்கும். மேஷ மற்றும் துலாம் ராசியினர் பணியிடங்களில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் உருவாவதால், வேலைப்பளு சற்று அதிகரிக்கும். தனுசு மற்றும் கும்ப ராசியிக்காரர்கள் தங்களின் சேமிப்புத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது எதிர்காலத்திற்குப் பலன் தரும். குடும்ப உறவுகளுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தலைதூக்கினாலும், விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அமைதியைக் காக்க முடியும்.

Also Read: சனியின் வக்ர இயக்கம்.. ஜூலை 27 முதல் இந்த 2 ராசிகளுக்கும் கடினமான காலம்!

நிதானமும் எச்சரிக்கையும் தேவைப்படும் ராசிகள்

மிதுனம், விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசியினருக்கு இந்த மாதம் சவால்கள் நிறைந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. தொழிலில் கடுமையான உழைப்பை முதலீடு செய்தால் மட்டுமே இவர்களால் நினைத்த இலக்கை எட்ட முடியும். குறிப்பாக மிதுன மற்றும் விருச்சிக ராசியினர் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். மகரம் மற்றும் மீன ராசியினர் பணப் பரிவர்த்தனைகளிலும், புதிய முதலீடுகளிலும் பெரிய மனிதர்களின் ஆலோசனையின்றி இறங்கக் கூடாது. மேலும், முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் உடல்நலத்தில் சிறு உபாதைகள் வரக்கூடும் என்பதால், ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துவது உசிதமானது.

Follow Us