Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தை 2வது வெள்ளி- பஞ்சமி திதி.. இன்று இதை செய்ய தவறாதீர்கள்!!

Panchami tithi: வசந்த நவராத்திரி காலத்தில் வரும் வசந்த பஞ்சமி ராஜமாதங்கிக்கு மிகுந்த சிறப்பு. அந்த நாளில் ஷ்யாமளா தண்டகம், லலிதா ஸஹஸ்ரநாமம், தேவி மாஹாத்மியம் போன்ற பாராயணங்கள் செய்யலாம். வீட்டில் முழுமையான பூஜை செய்ய முடியாதவர்களும், கோவிலுக்குச் சென்று அம்பாளை தரிசித்து வருவது கூட போதுமானதாகக் கருதப்படுகிறது.

தை 2வது வெள்ளி- பஞ்சமி திதி.. இன்று இதை செய்ய தவறாதீர்கள்!!
மாதிரிப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 23 Jan 2026 15:06 PM IST

தை மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளி, அதுவும் வளர்பிறை பஞ்சமி திதியுடன் சேர்ந்தால், அது ஆன்மிக ரீதியாக மிகுந்த சிறப்புடைய நாளாகக் கருதப்படுகிறது. திதி என்பது சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளுக்கிடையிலான இடைவெளியை அடிப்படையாகக் கொண்டது. அந்த அடிப்படையில், ஒவ்வொரு நாளும் மனித வாழ்க்கையில் செய்ய வேண்டிய ஆன்மிகச் செயல்களுக்கு ஏற்றதாக அமைகிறது. அவற்றில் பஞ்சமி திதி எப்போதும் சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: தைப்பூசத்தில் அப்படி என்ன சிறப்பு?.. எதனால் கொண்டாடுகிறோம்?..

பஞ்சமியில் இணையும் 3 சக்திகள்:

பஞ்சமி திதி என்பது ஞான சக்திக்கு உகந்த திதி. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்ற மூன்று சக்திகளில், பஞ்சமி நாளில் குறிப்பாக மூன்று சக்திகளும் ஒன்றாக இணையும் நாள் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு, சாதாரண நாள்களைக் காட்டிலும் அதிக ஆன்மிக பலனைத் தரும் என நம்பப்படுகிறது. குறிப்பாக தை மாதம் முழுவதும் விசேஷமானது என்பதால், அதில் வரும் இரண்டாவது வெள்ளி பஞ்சமி மிகுந்த மகத்துவம் பெறுகிறது.

ராஜமாதங்கி அம்மன் வழிபாடு:

இந்த நாளில் ராஜமாதங்கி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாகக் கூறப்படுகிறது. ராஜமாதங்கி என்பது வாக்குச் சுத்தி, கல்வி, ஞானம், கலை, நிர்வாகத் திறன் ஆகியவற்றை அருளும் தேவியாக போற்றப்படுகிறார். அவர் பாலா திரிபுரசுந்தரி, வாராகி போன்ற பரிவார தேவிகளுடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார். ராஜமாதங்கி கையில் வீணை வைத்திருக்கும் உருவமாக சித்தரிக்கப்படுவதால், அவர் வாக்கு மற்றும் கலைக்கான அதிபதி என்று நம்பப்படுகிறது.

கோவில் சென்று அம்பாளை தரிசிக்கலாம்:

வசந்த நவராத்திரி காலத்தில் வரும் வசந்த பஞ்சமி ராஜமாதங்கிக்கு மிகுந்த சிறப்பு. அந்த நாளில் ஷ்யாமளா தண்டகம், லலிதா ஸஹஸ்ரநாமம், தேவி மாஹாத்மியம் போன்ற பாராயணங்கள் செய்யலாம். வீட்டில் முழுமையான பூஜை செய்ய முடியாதவர்களும், கோவிலுக்குச் சென்று அம்பாளை தரிசித்து வருவது கூட போதுமானதாகக் கருதப்படுகிறது.

வெல்லம் கலந்த நெய்வேத்தியம்:

நெய்வேத்தியத்தில் வெல்லம் கலந்த நெய்வேத்தியம் முக்கியம். இதனை திருமத்துரம் என்று அழைப்பார்கள். பசும் நெய், பசும் பால், தேன் ஆகிய மூன்றையும் கலந்து நெய்வேத்தியம் செய்யலாம். பாயசம் செய்வதும் உகந்தது. மலர்களில் செண்பகம், மனோரஞ்சிதம், தாழம்பூ போன்ற வாசனைமிகு மலர்கள் விசேஷமாகக் கூறப்படுகின்றன. மேலும் மயில் கழுத்து நிறம் (பச்சை – நீலம் கலந்த) கோலம் அல்லது அலங்காரம் செய்வது சிறப்பானதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: தைப்பூசம் 2026: முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? எப்போது விரதம் தொடங்க வேண்டும்? முழு விவரம்!!

எனவே, சிறப்பு மிகுந்த இந்த தை இரண்டாவது வெள்ளி பஞ்சமி நாளில் ராஜமாதங்கி வழிபாடு செய்வது, ஞான வளர்ச்சி, வாக்குத் தெளிவு, மன ஒருமைப்பாடு மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றை அருளும் ஒரு உயர்ந்த ஆன்மிக வழிபாடாக விளங்குகிறது.