Vastu Tips: வீட்டுக்கான வாஸ்து.. இந்த தப்பை செய்யாதீங்க.. அப்புறம் நஷ்டம் தான்!
வீட்டின் வடகிழக்கு மூலை ஈசான்யம் எனப்படும் புனிதமான பகுதியாகும். இங்கு குப்பை, கனமான பொருட்கள் வைப்பது வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். நேர்மறை ஆற்றல் குறைந்து வறுமை, பிரச்சனைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. இங்கு குளியலறை, சமையலறை அமைக்கக் கூடாது. சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருந்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கலாம்.

இந்து மதத்தில் ஜோடத்திற்கு சமமாக மக்கள் வாஸ்து சாஸ்திரத்தை நம்புகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் வாஸ்துவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன என நம்பப்படுகிறது. அதனால் தான் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என எந்த வகையான அமைப்பைக் கட்டினாலும் வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஒரு கட்டடம் முழுமையான வாஸ்து விதிகளுடன் கட்டப்பட்டிருந்தாலும், அந்த கட்டடத்தின் திசையில் வைக்கப்படும் ஒரு பொருள் கூட தவறாக இருந்தால், உங்கள் அதிர்ஷ்டத்தை பறிக்கும் என்று வாஸ்து ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இதுபோன்ற சிறிய தவறுகள் உங்கள் வீட்டில் செல்வம் சேர விடாமல் வறுமையில் தள்ளும் என்றும் கூறப்படுகிறது.
அதாவது வாஸ்து சாஸ்திர விதிகளைப் பின்பற்றாவிட்டால், வாஸ்து தோஷம் ஏற்படும். இதனால் எதிர்மறை எண்ணங்கள், வறுமை, உடல்நல பிரச்னைகள், வேலைகளில் கடும் நெருக்கடி, மன அழுத்தம் மற்றும் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் தோன்றும். வாஸ்து விதிகளின்படி வீட்டில் பொருட்களை வைக்காவிட்டாலும், அது குடும்ப உறுப்பினர்களை மிக மோசமாக பாதிக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் வீட்டின் வடகிழக்கு திசையில் எந்த பொருட்கள் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
Also Read: Vastu Tips: இதெல்லாம் கிஃப்ட் கொடுக்காதீங்க.. பணப் பிரச்னை வரலாம்!
வடகிழக்கு திசை
வீட்டின் வடகிழக்கு திசை இஷான் கோன் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த பக்கமாகும். சாஸ்திரத்தில் இது மிகவும் புனிதமான மற்றும் சக்திவாய்ந்த திசையாகக் கருதப்படுகிறது. இந்த திசை ஞானம், அமைதி மற்றும் செழிப்புக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. எனவே, வீட்டின் பூஜை அறை வடகிழக்கு மூலையில் கட்டப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் தவறுதலாக வடகிழக்கு திசையில் குப்பைகளையோ அல்லது கனமான பொருட்களையோ வைக்க வேண்டாம். மேலும், தவறுதலாக கூட வடகிழக்கு மூலையை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
நேர்மறை ஆற்றல் குறையும்
வடகிழக்கு திசையை அழுக்காக வைத்திருப்பதோ அல்லது கனமான பொருட்களையும், குப்பைகளையும் அங்கு வைத்திருந்தால் நேர்மறை ஆற்றல் ஓட்டமானது தடுக்கப்படுகிறது. இது வாஸ்து குறைபாட்டை அதிகரிக்கிறது. அதன் காரணமாக வீட்டில் பதற்றத்தை உண்டாகும். செய்யும் வேலையில் தடைகள் ஏற்படும். முன்னேற்றம் நின்றுவிடும். வீட்டில் வறுமை அதிகரிக்கும். செல்வ வளம் குறையத் தொடங்கும். எனவே, வடகிழக்கு திசையில் பயனற்ற பொருட்களை ஒருபோதும் வைக்க வேண்டாம்.
Also Read: Vastu Tips: வீட்டில் சிவப்பு நிற பூச்செடி இருக்கா? – உடனே இதைப் பண்ணுங்க!
அதேசமயம் எந்த சூழ்நிலையிலும் வடகிழக்கு திசையில் குளியலறை-கழிப்பறை போன்றவற்றை கட்டக்கூடாது என்று கூறப்படுகிறது. இது தெய்வங்களை கோபப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அத்தகைய குடும்பத்தில் மகிழ்ச்சி பறிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும், சமையலறையையும் இந்த திசையில் அமைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இதைச் செய்வது குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் மற்றும் கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மூலையில் என்ன செய்யலாம்?
வாஸ்து தோஷம் ஏற்படாமல் இருக்க வடகிழக்கு திசையை எப்போதும் சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்க வேண்டும். இது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த பகுதியில் ஒரு ஜன்னல் நிறுவப்படலாம். இதனால் சூரிய ஒளி நேரடியாக வீட்டில் வரும்போது கடவுள் இருப்பு, பாசிட்டிவ் எண்ணம் ஆகியவை ஏற்படுகிறது. இந்த மூலையில் அழகான ஆபரணங்கள் மற்றும் ஒளிரும் பொருட்களை வைக்கலாம். ஒரு நீர் ஊற்று வைக்கலாம். மேலும் வடகிழக்கு திசையில் தண்ணீர் நிரப்பப்பட்ட பானையை வைப்பது மகத்தான செல்வத்தையும் செழிப்பையும் தரும் என்று கூறப்படுகிறது.